Home
Mobile

செப்.2 குறிச்சாச்சு.. வெறும் ரூ.20,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 3 OS அப்டேட்.. எந்த மாடல்?

இந்திய மார்க்கெட்டில் ரியல்மி 15டி (Realme 15T) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பட்ஜெட் செக்மெண்ட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரியல்மி பிரியர்கள் படுகுஷியில் இருக்கின்றனர். 7000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15 மற்றும் ரியல்மி 15 ப்ரோ மாடல்களுக்கு அடுத்து ரியல்மி 15டி மாடலானது, இந்தியாவில் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று ரியல்மி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதோடு கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற முக்கிய பீச்சர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் செக்மெண்ட்டையும் உறதி செய்துள்ளது.

செப்.2 குறிச்சாச்சு.. வெறும் ரூ.20,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி!

ரூ.20,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாக இருக்கிறது. வெறும் 7.79 எம்எம் தடிமனில் 7000mAh பேட்டரி கிடைக்க இருப்பதால், ஸ்லிம் பாடியில் ஸ்மார்ட்போன்களை விரும்பும் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு மற்ற பீச்சர்களை எப்படி இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15டி அம்சங்கள் (Realme 15T Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 7.79 எம்எம் தடிமன் மற்றும் 181 கிராம் எடை மட்டுமே வர இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. இந்த கேமராவில் ரெட்ரோ ஃபில்டர்கள் (Retro Filters) மற்றும் ஏஐ எடிட் ஜீனி (AI Edit Genie) பீச்சர்கள் கிடைக்கின்றன.

இந்த ஜீனி பீச்சர் மூலம் குறிப்பிட்ட போட்டோ எடிட்களை வாய்ஸ் மூலம் கமெண்ட் செய்து முடித்து கொள்ளலாம். இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.57 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் மினி கேப்சூல் பீச்சர் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் யுஐ அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

செப்.2 குறிச்சாச்சு.. வெறும் ரூ.20,000 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி!

இந்திய மார்கெட்டில் ஸ்லிம்மஸ்ட் பாடியில் 7000mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது. 25.3 மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கிடைக்கும். இந்த பட்ஜெட்டில் பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 7400 மேக்ஸ் 6என்எம் 5ஜி (MediaTek Dimensity 6400 Max 6nm 5G) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.

மேலும், ரியல்மி யுஐ 6.0 (Reamle UI 6.0) கிடைக்கிறது. இதுபோக 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் பெற்று கொள்ளலாம். IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் மைக்ரோ டெக்ச்சர்டு பேக் பேனலில் மேட் பினிஷிங் கிடைக்கிறது. இந்த டிசைனில் ப்ளோயிங் சில்வர் (Flowing Silver), சில்க் ப்ளூ (Silk Blue) மற்றும் சூட் டைட்டானியம் (Suit Titanium) ஆகிய கலர்கள் இருக்கின்றன. இந்த பீச்சர்களை ரியல்மி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

அதேபோல பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதால், பட்ஜெட் பிரியர்களிடையே வரவேற்பு பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், இதில் 7000mAh பேட்டரி மற்றும் கேமரா பீச்சர்கள் இந்தியர்களுக்கு ஏற்றபடி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15T With 50MP Camera 7000mAh Battery To Launch in India on September 2 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X