Home
Mobile

விலை இவ்ளோ தானா.. 7.79 மிமீ ஸ்லிம் டிசைனில் 7000mAh பேட்டரி.. புதிய Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 15 சீரீஸின் (Realme 15 Series) கீழ் மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் அறிமுகமாகி விட்ட 2 மாடல்களையும் சேர்த்து, இந்நிறுவனம் வருகிற செப்டம்பர் மாதத்தில் அதன் ரியல்மி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 15 (Realme 15), ரியல்மி 15டி (Realme 15T) மற்றும் ரியல்மி 15 ப்ரோ (Realme 15 Pro) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இதில் ஸ்டாண்டர்ட் (ரியல்மி 15) மற்றும் ப்ரோ (ரியல்மி 15 ப்ரோ) மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆக இந்த சீரீஸின் "பிரெஷ் மாடல்" - ரியல்மி 15டி (Realme 15T) தான்!

விலை இவ்ளோ தானா.. 7.79 மிமீ ஸ்லிம் டிசைனில் 7000mAh பேட்டரி!

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் சீன அறிமுகத்திற்கு பின்னர் ரியல்மி 15டி மாடல் இந்திய சந்தைக்கு வருமா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - நிச்சயமாக வரும். இதற்கிடையில் தான் ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் (லீக்டு) அம்சங்கள்: டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த விவரங்களின் படி, இது 6.57-இன்ச் பிளாட் டிஸ்பிளேவுடன் வரும். மேலும் அகலமான , வட்டமான விளிம்புகள் மற்றும் ஒரு கையால் எளிதாகப் பயன்படுத்தும் ஸ்லிம் டிசைனை பெறும்; 7.79 மிமீ தடிமன் கொண்டதாக இருக்கலாம்!

மெலிதான வடிவமைப்பை கொண்டிருந்தாலும் கூட இது ஒரு பெரிய பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த விலைப்பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்ஷனாக மாறும்படியான ஒரு பெரிய பேட்டரியை பேக் செய்யும். எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் பகிர்ந்த தகவலின்படி இது 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் (MediaTek Dimensity 6400 Max) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் ரியர் சென்சார் மற்றும் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

ரியல்மி 15டி என்ன விலைக்கு வரும்? பெரும்பாலும் இது ரூ.20,000 க்கு அருகிலான பட்ஜெட்டில் தான் வரும். ஏனென்றால் ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 19,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 180ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ அம்சத்தையும், ஏஐ ஆதரவுடன் கூடிய இமேஜிங் டூல்களையும் ஆதரிக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15T to Pack 7000mAh Battery in 7.79mm Slim Design Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X