7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. வருகிறது புதிய ரியல்மி 5ஜி போன். எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 15டி (Realme 15T) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி 15டி அம்சங்கள் (Realme 15T specifications): 6.57-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 10-பிட் கலர் டெப்த், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6400 Max 5G chipset)உடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
ரியல்மி யுஐ 6.0. (Realme UI 6.0.) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15)இயங்குதள வசதியுடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு மூன்று வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஏஐ ஸ்னாப் (AI Snap), ஏஐ இமேஜ் என்லார்ஜ்மெண்ட் (AI Image Enlargement), உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் புதிய ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.
IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு 6050 square mm ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமை கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் ரியல்மி 15டி போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த புதிய ரியல்மி போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








