Home
Mobile

இந்தியாவில் ரியல்மி 15டி போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. என்ன விலை? விற்பனை எப்போது?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி 15டி (realme 15T) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். அதுவும் இந்த போன் பட்ஜெட் விலையில் 7000எம்ஏஎச் பேட்டரி, IP69 ரேட்டிங், 50எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி 15டி போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி 15டி அம்சங்கள் (realme 15T specifications): 6.57-இன்ச் 4ஆர் கம்போர்ட் பிளஸ் அமோலெட் டிஸ்பிளே(4R Comfort+ AMOLED display)உடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080×2,372 பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) உள்ள பல அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் ரியல்மி 15டி போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி..  என்ன விலை?

எனவே பகல் நேரத்தில் சூரிய வெளிச்சத்திலும் இந்த போனின் டிஸ்பிளேவை துல்லியமாகப் பார்க்க முடியும். அதேபோல் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 எஸ்ஒசி (octa-core MediaTek Dimensity 6400 SoC) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.

இதுதவிர 6,050 sq mm ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமை ( 6,050 sq mm AirFlow vapour chamber cooling system) கொண்டுள்ளது இந்த போன். இது இருப்பதால் நீண்ட நேரம் போனில் கேம் விளையாடினாலும் போன் சூடாகாது. அதேபோல் ரயில்மி யுஐ 6 (Realme UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த புதிய ரியல்மி போனை வாங்க முடியும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 15டி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், AI எடிட் ஜெனி, AI ஸ்னாப் மோட், AI லேண்ட்ஸ்கேப் போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio)உள்ளிட்ட வசதிகளும் இந்த புதிய ரியல்மி போனில் இருக்கிறது.

7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த புதிய ரியல்மி போனில் உள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் ரியல்மி 15டி போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி..  என்ன விலை?

ரியல்மி 15டி விலை: 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 15டி போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.22,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.24,999 விலையிலும் வாங்க முடியும். ப்ளோயிங் சில்வர் (Flowing Silver), சில்க் ப்ளூ (Silk Blue) மற்றும் சூட் டைட்டானியம் (Suit Titanium) நிறங்களில் இந்த வாங்க போன் கிடைக்கும்.

வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் பிளிப்கார்ட், ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைக்களில் ரியல்மி 15டி போனை வாங்க முடியும். ஆன்லைனில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி உள்ளது. அதேபோல் ஆஃப்லைனில் கூட இந்த போனை சலுகை விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
realme 15T smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X