Home
Mobile

பின்றானே இவன்.. 7.79 எம்எம் பாடி.. ரூ.20,000 பட்ஜெட்ல 60W சார்ஜிங்.. டைமன்சிட்டி 6400 மேக்ஸ்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா ஸ்லிம் பாடியில் ஸ்மார்ட்போன் விரும்பும் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ரியல்மி 15டி (Realme 15T) ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் அதிகார்பூர்வ இமேஜ்களுடன் கசிந்துள்ளன. இதில் ஸ்லிம்மஸ்ட் மாடலாக வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதேபோல சிப்செட், கேமரா மற்றும் விசி கூலிங் சிஸ்டம் போன்ற பீச்சர்களையும் பார்க்க முடிகிறது. இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15 (Realme 15) மற்றும் ரியல்மி 15 ப்ரோ (Realme 15 Pro) ஸ்மார்ட்போன்கள் இந்திய மார்கெட்டில் கடந்த மாதம் வெளியாகின. ஆகவே, ரியல்மி 15டி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப ஆகஸ்ட் மாத இறுதியில் ரியல்மி 15டி வெளியாகும் என்ற தகவல் மற்றும் ரேம், ஸ்டோரேஜ் பீச்சர்கள் உள்ளிட்ட விவரங்கள் மார்கெட்டில் கசிந்தன.

பின்றானே இவன்.. 7.79 எம்எம் பாடி.. ரூ.20,000 பட்ஜெட்ல 60W சார்ஜிங்!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரியல்மி நிறுவனம் வெளியிடவில்லை. இதனால், செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அடுத்த சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் ப்ரோமோஷனல் இமேஜ்கள் கசிந்துள்ளன.

அதோடு பட்ஜெட் விவரங்களும் கசிந்து இருக்கின்றன. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், இந்த இமேஜ்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை அவரது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். இதனால், ரியல்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஸ்லிம்மான ஸ்மார்ட்போன் விரும்பும் கஸ்டமர்களும் படுகுஷியாகிவிட்டனர். அதில் என்னென்ன பீச்சர்கள் இருக்கின்றன.

ரியல்மி 15டி அம்சங்கள் (Realme 15T Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 7.79 எம்எம் தடிமன் கொண்ட அல்ட்ரா ஸ்லிம் பாடி கிடைக்க இருக்கிறது. அதேபோல 181 கிராம் மட்டுமே எடை இருக்கப் போகிறது. ஆகவே, இந்த செக்மெண்ட்டில் ஸ்லிம்மஸ்ட் மற்றும் லைட்டஸ்ட் மாடலாக இந்த ரியல்மி 15டி களமிறங்கப் போகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7400 மேக்ஸ் 6என்எம் 5ஜி (MediaTek Dimensity 6400 Max 6nm 5G) சிப்செட் கிடைக்க இருக்கிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 5 வருட ஹெல்த் கிடைக்க இருக்கிறது. மேலும், பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) வர இருக்கிறது.

60W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைத்தாலும், இதில் 80W சார்ஜிங் அடாப்டர் கிடைக்க இருக்கிறது. 6050 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) வர இருக்கிறது. ஏற்கனவே, பைபாஸ் சார்ஜிங் இருக்கிறது. இப்போது, கூலிங் சிஸ்டமும் கிடைக்க இருப்பதால், இதை கேமிங் மாடலாகவும் எதிர்பார்க்கலாம். மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஆகவே, ப்ளோயிங் சில்வர் (Flowing Silver), சில்க் ப்ளூ (Silk Blue) மற்றும் சூட் டைட்டானியம் (Suit Titanium) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அந்த ப்ரோமோஷனல் இமேஜ்களில் இருந்தது. மேலும், ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விலை விவரங்கள் கசிந்துள்ளன. அதை பார்ப்போம்.

இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கப்போகிறது. ரியல்மி 14டி ஆனது இந்தியாவில் ரூ.17,999 பட்ஜெட்டில் வெளியாகியது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15T Official Images Leaked With Dimensity 6400 Max 5G Check Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X