Home
Mobile

அடுத்த ரியல்மி 5ஜி போன் ரெடி.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 15டி 5ஜி (Realme 15T 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது Geekbench தளத்தில் வெளியாகி உள்ளன. மேலும் இந்த போனின் மாடல் நம்பர் RMX5111 ஆகும். எனவே வரும் வாரங்களில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவரும். இந்நிலையில் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அடுத்த ரியல்மி 5ஜி போன் ரெடி.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி 15டி 5ஜி அம்சங்கள் (Realme 15T 5G specifications): 6.57-இன்ச் பிளாட் ஒஎல்இடி (flat OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Dimensity 6400) சிப்செட் உடன் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றெ 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15(Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

7000mAh பேட்டரி உடன் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 15டி 5ஜி போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15T 5G specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X