வெளுத்துக் கட்டும் அமேசான்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது அமேசான் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் தரமான ரியல்மி 5ஜி போன் ஒன்று சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி 15டி 5ஜி அம்சங்கள் (realme 15T 5G specifications): ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்
8ஜிபி ரேம் + 128ஜிபி கொண்டுள்ளது இந்த ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
6.57-இன்ச் 4ஆர் கம்போர்ட் பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (4R Comfort+ AMOLED display) உடன் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,080×2,372 பிக்சல்ஸ், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming) போன்ற பல அம்சங்கள் உள்ளன.
6,050 sq mm ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமை ( 6,050 sq mm AirFlow vapour chamber cooling system) கொண்டுள்ளது இந்த போன். இந்த வசதி இருப்பதால் நீண்ட நேரம் போனில் கேம் விளையாடினாலும் போன் சூடாகாது. அதேபோல் ரயில்மி யுஐ 6 (Realme UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், AI எடிட் ஜெனி, AI ஸ்னாப் மோட், AI லேண்ட்ஸ்கேப் போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த புதிய ரியல்மி போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio)உள்ளிட்ட வசதிகளும் இந்த புதிய ரியல்மி போனில் இருக்கிறது
7000mAh பேட்டரி மற்றும் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த ரியல்மி போனில் உள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications