மொத்தமா அதிரப் போகுது.. SONY சென்சார்.. OIS டெக்னாலஜி மட்டுமல்ல.. 4K 60FPS வீடியோ.. 50MP செல்பீ.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் கேமரா பிரியர்களை தட்டித் தூக்கும்படியான ஒட்டுமொத்த பீச்சர்களுடன் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் போன்ற பீச்சர்கள் உறுதியாகி இருந்தது, இப்போது கேமரா பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்கள் கேமரா பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது. கூடவே, பிரத்யேக ஏஐ பீச்சர்களையும் களமிறக்கி இருக்கிறது.
ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமானால், கேமரா பீச்சர்களை முதலில் பார்க்கும் பழக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. செல்பீ, விலாக் மற்றும் நைட் போட்டோகிராபிக்கு இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனாலேயே இங்கு கேமரா பீச்சர்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு மாடல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனானது, கேமரா மட்டுமல்லாமல் மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஜூலை 24ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இதனால், ரியல்மி தளத்தில் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இப்போது, உறுதி செய்யப்பட்ட கேமரா பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேமரா எப்படி?
சோனி ஐம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதுவொரு டிரிபிள் ரியர் கேமரா மாடலாகும். ஆகவே, மெயின் கேமராவுடன் அல்ட்ரா வைடு போன்ற வழக்கமான செட்டப் எதிர்பார்க்கலாம். இதுபோக 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது.
அதேபோல 4X டிஜிட்டல் ஜூமிங் வர இருக்கிறது. மேலும், ஏஐ பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதாவது, வழக்கமாக கிடைக்கும் ஏஐ எரைசர், ஏஐ பெஸ்ட் பேஸ் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரத்யேக ஏஐ கேமரா பீச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜில் மூன்று புதிய ஏஐ கேமரா பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஏஐ கேமரா பீச்சர்கள் எப்படி?
மேஜிக் க்ளோவ் 2.0 (MagicGlow 2.0) பீச்சர் மூலம் ஸ்கின் டோன் மற்றும் லைட்னிங் மாற்றி கொள்ளலாம். அதேபோல போர்ட்ராய்ட் அவுட்புட்களுக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், பார்டி மோட் (Party Mode) பீச்சர்கள் கிடைக்கிறது. இதில் லைட்னிங் எஃபெக்ட்களை மாற்றி கொள்ளலாம். அதேபோல பேங்கிரவுண்ட் எஃபெக்ட்களும் கிடைக்க இருக்கின்றன.
வாய்ஸ் மூலம் எடிட் செய்யும்படி எடிட் ஜீனி (Edit Genie) வருகிறது. இந்த ஜீனி பீச்சர் மூலம் 20 மொழிகளில் எடிட் செய்து கொள்ளலாம். அதேபோல பேக்கிரவுண்ட்களை மாற்றி கொள்ளலாம். கிளார் கரெக்சன், கிராப்பிங் போன்ற பல்வேறு எடிட்டிங் டூல்களை கொடுக்கிறது. இப்போது, சிப்செட், பேட்டரி, டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 15 Pro 5G Specifications):
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் கிடைக்க இருக்கிறது. பெரிய 7000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்க இருக்கிறது. ஆகவே, கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கிடைக்கும். வெறும் 7.69 எம்எம் தடிமன் மட்டுமே உள்ளது.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட குவாட் கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. அதேபோல அவுட்டோரில் பிரீமியம் அவுட் கொடுக்கும்படி 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. இதை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








