ஜூலை 24-க்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படி கர்வ்ட் டிஸ்பிளேவில் 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) வெளியாக இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஜூலை 24ஆம் தேதி அன்று இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி போன் வெளியாக இருக்கிறது. இதனால், ரியல்மி இந்தியா தளத்தில் இந்த போனின் பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இப்போது, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இப்படி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 15 Pro 5G Specifications): இந்த ரியல்மி போனில் வழக்கமான ஏஐ பீச்சர்களுடன் புதியாக ஏஐ எடிட் ஜீனி (AI Edit Genie) பீச்சர் வர இருக்கிறது. வாய்ஸ் ப்ராம்ப்ட் மூலம் போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம். மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) கிடைக்க இருக்கிறது. இந்த சிப்செட் மூலம் 200 சதவீத ஏஐ பர்ஃபாமென்ஸ் மற்றும் 3எஸ் ஃபாஸ்டர் ஆப் லாஞ்ச் கிடைக்கும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவிக்கிறது. வெறும் 7.69 எம்எம் தடிமனில் 7000mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது. ஆகவே, ஸ்லிம் பாடியில் அதிக பேக்கப் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது.
80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. பெரிய பேட்டரி இருந்தும், 4டி கர்வ்ட் பிளஸ் (4D Curved+) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் கிடைக்க இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 2500Hz ஜீரோ-லேக் டச் ரென்ஸ்பான்ஸ் கிடைக்க இருக்கிறது.

இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனில் பிரீமியம் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்க IP69 ரேட்டிங் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளே மட்டுமல்லாமல், மொத்த பாடிக்கும் டியூரபிலிட்டி எதிர்பார்க்க முடிகிறது. இந்த ரியல்மியில் ஃப்ளோயிங் சில்வர் (Flowing Silver), சில்க் பிங்க் (Silk Pink), சில்க் பர்பிள் (Silk Purple) மற்றும் வெல்வெட் கிரீன் (Velvet Green) ஆகிய கலர்கள் வருகிறது.
மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்களுடன் ரியல்மி இந்தியா தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைப்பது உறுதியாகும். விலை விவரங்கள் வெளியாகவில்லை.
இருப்பினும், இந்திய மார்கெட்டில் ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. ஆகவே, ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனையும் ரூ.26,999 அல்லது ரூ.28,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். பீச்சர்களும் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்பவே இருக்கின்றன. ஓரிரு நாட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications








