Home
Mobile

ரூ.4000 பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 4D டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 50MP SONY கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனத்தின் 4டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலான ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி சோனி சென்சார் கேமரா கொடுப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.29,999 விலைக்கு இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும்.

ரூ.4000 பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 4D டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி!

ரியல்மி 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 15 Pro 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்து உள்ளது. ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கிடைக்கிறது.

2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொன்ட 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) 4டி கர்வ்பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2500Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

மேலும், 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது. 1800 நிட்ஸ் எச்பிஎம் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை இந்த ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவும் கிடைக்கிறது.

4K ரெசொலூஷனில் சினிமாடிக் மோட் ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஏஐ லேண்ட்ஸ்கேப், டூயல் வீடியோ, அண்டர் வாட்டர், டில்ட் ஷிப்ட் போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கிறது. மேலும், ஏஐ பார்ட்டி மோட் (AI Party Mode), ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode), ஏஐ எடிட் ஜீனீ (AI Edit Genie) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. குளோவிங் லைட் எபெக்ட்கள் வருகின்றன.

இதில் ஸ்டார்பர்ஸ்ட் எபெக்ட் (Starburst Effect), ஹார்ட் எபெக்ட் (Heart Effect) போன்றவை உள்ளன. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 50 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 80W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. 7000 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது.

டூயல் 5ஜி மோட் கிடைக்கிறது. வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. சில்க் பர்பிள் (Silk Purple), வெல்வெட் கிரீன் (Velvet Green) மற்றும் பிளோவிங் சில்வர் (Flowing Silver) கலர்களில் இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15 Pro 5G With 7000mAh Battery Available At Rs 4000 Bank Discount in Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X