ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. 4D டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) போனின் விற்பனை டிஸ்கவுண்ட் போக தொடங்கிவிட்டது. 4டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடல்களின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.38,999ஆகவும் இருக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் இந்த விலைகளுடன் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.28,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை மல்டிபிள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷன்களுக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ரியல்மி 15 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 15 Pro 5G Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) 4டி கர்வ்ட் அமோலெட் (4D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கிடைக்கிறது.
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டுக்கு ஏற்ப பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.

இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி சென்சாரும், செல்பீ ஷூட்டரில் ஓம்னிவிஷன் சென்சாரும் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் IP68 + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
ரியல்மி 15 5ஜி போனின் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வருகிறது.
ஆகவே, ரூ.23,999 பட்ஜெட்டில் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை வாங்கி கொள்ளலாம். இந்த மடாலின் பீச்சரில் சிப்செட் மற்றும் கேமரா பீச்சர்கள் மட்டுமே மாறுகிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆகவே, இதில் மீடியாடெட் டைமன்சிட்டி 7300பிளஸ் சிப்செட் உள்ளது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.


Click it and Unblock the Notifications








