கலர் மாறும் Game of Thrones டிசைன், 7000mAh பேட்டரி உடன் புதிய Realme போன் அறிமுகம்.. என்ன விலை? எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் ஒரு புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. அது ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேம் ஆஃப் த்ரோன்ஸ் லிமிடெட் எடிஷன் (Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition) ஆகும்!
பெயர் குறிப்பிடுவது போலவே, இது கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் லிமிடெட் எடிஷன் ஆகும். அதாவது சில மேலோட்டமான மாற்றங்களை தவிர்த்து, இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் அம்சங்கள் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருக்காது. புதிய லிமிடெட் எடிஷனில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸால் ஈர்க்கப்பட்ட ஒப்பனை மாற்றங்கள் உள்ளன. இதில் ஸ்டைலைஸ்டு நானோ-என்கார்வ்டு மோடிஃப்ஸ் மற்றும் கஸ்டம் யூசர் இன்டர்பேஸ் (யுஐ) தீம்களும் அடங்கும்.

ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேம் ஆஃப் த்ரோன்ஸ் லிமிடெட் எடிஷன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்திய சந்தையில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
தகுதியான பேங்க் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ. 3,000 தள்ளுபடியைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ரூ.41,999 க்கு வாங்கலாம். இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகள் வழியாக விற்கப்படும்.
சுவாரசியமாக வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை கலெக்டபிள் பேக்கேஜிங்கில் (Collectable packaging) பெறுவார்கள். அதில் ஐரன் த்ரோன் மொபைல் ஸ்டேண்ட் (Iron Throne phone stand), ஒரு கிங்ஸ் ஹேண்ட் பின் (King's hand pin), வெஸ்டெரோஸின் மினியேச்சர் காப்பி (Miniature replica of Westeros) மற்றும் கேம் ஆஃப் த்ரோன்ஸ்-பிராண்டட் ஸ்டிக்கர்கள், போஸ்ட் கார்டுகள் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் ஆகியவைகள் இருக்கும்.
ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேம் ஆஃப் த்ரோன்ஸ் லிமிடெட் எடிஷன் அம்சங்கள்: இது ஒரு பிரத்யேக பிளாக் மற்றும் கோல் கலர் ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. கேமரா ஐலேண்டில் 3டி பிரிண்டட் டிராகன் க்ளா பார்டர் மற்றும் நானோ-பிரிண்டட் மோடிஃப்ஸ்களை கொண்டுள்ளது. மூன்று தனித்துவமான லென்ஸ்கள் ஒவ்வொன்றையும் சுற்றி, டெகரேட்டிவ் லென்ஸ் ரிங்ஸ் உள்ளன.
இதற்கிடையில், ஸ்மார்ட்போனின் கீழ் பாதியில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நிகழ்ச்சியிலிருந்து ஹவுஸ் தர்காரியனின் சின்னமும் உள்ளது, இது மூன்று தலை டிராகனால் குறிக்கப்படுகிறது. மேலும் ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் நிறம் மாறும் லெதர் பேக் பேனல் உள்ளது. இது பொதுவாக கருப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் 42 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் சிவப்பு நிறத்திற்கு மாறும்.
மேலும் பயனர்கள் ஐஸ் டோன்களுடன் கூடிய ஜிஓடி-ஆல் ஈர்க்கப்பட்ட ஸ்டாக் "ஐஸ்" யுஐ தீம் அல்லது உமிழும் வண்ணங்களுடன் கூடிய டார்கர்யன் "டிராகன்ஃபயர்" யுஐ தீம் ஆகியவற்றையும் அணுகலாம். மேலும் இதில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் வால்பேப்பர்கள் மற்றும் ஐகான்களும் உள்ளன.
முன்னரே குறிப்பிட்டபடி மேற்கண்ட மேலோட்டமான மாற்றங்களை தவிர்த்து - ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேம் ஆஃப் த்ரோன்ஸ் லிமிடெட் எடிஷன் மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்டாண்டர்ட் எடிஷன் ஆகிய இரண்டிற்கும் அம்சங்கள் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் கிடையாது.
ரியல்மி 15 ப்ரோ 5ஜி கேம் ஆஃப் த்ரோன்ஸ் லிமிடெட் எடிஷன் முக்கிய அம்சங்கள்:
- 6.8-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- 50 மெகாபிக்சல் சோனி IMX896 ப்ரைமரி ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைட்-ஆங்கிள் லென்ஸ்
- 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66+IP68+IP69 ரேட்டிங்ஸ்
- 7000mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்.


Click it and Unblock the Notifications








