Home
Mobile

அடிதூள் விலையில் புது Realme 5G போன்.. 7000mAh பேட்டரி, HyperGlow 4D டிஸ்பிளே, IP69, AI Edit ஜீனி.. எந்த மாடல்

ரியல்மி (Realme) நிறுவனம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவில் தனது ரியல்மி 15 சீரீஸ் (Realme 15 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாக உள்ளன.

இவ்விரு மாடல்களில் - ரியல்மி 15 ப்ரோ 5ஜி மீது தான் பலருடைய பார்வையும் உள்ளது. ஏனென்றால் இது மிட்-ரேன்ஜ் விலை பிரிவில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு "தீவிரமான" போட்டியை வழங்கும் அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது - மிகப்பெரிய பேட்டரி மற்றும் வியக்கத்தக்க வகையில் பிரகாசமான டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிதூள் விலையில் புது Realme 5G போன்.. 7000mAh பேட்டரி!

ரியல்மி 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜூலை 24 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு அறிமுகமாகும் என்பதை ரியல்மியின் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் உறுதிப்படுத்துகிறது. அதோடு ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 7000mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங்கிற்கான 80W வயர்டு சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொருத்தவ்ரு இது ஹைப்பர்க்ளோ 4டி கர்வ் பிளஸ் அமோஎல்இடி (HyperGlow 4D Curve+ AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 94% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ, 2,500ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும்.

மேற்கண்ட அம்சங்கள் எலலாமே பல பிரீமியம் போன்களுக்கு போட்டியாக இருக்கும் அம்சங்கள் ஆகும். சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்குகிறது. 4என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்த சிப்செட் முந்தைய தலைமுறையை விட சிபியு செயல்திறனில் 27% முன்னேற்றத்தை உறுதியளிக்கிறது, மென்மையான கேமிங் மற்றும் மல்டி-டாஸ்கிங் அனுபவங்களையும் வழங்கும்.

மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யும் போதிலும், இந்த போன் 7.69 மிமீ தடிமன் என்கிற ஸ்லிம் ஆன டிசைனை கொண்டுள்ளது. மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. இது 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது: ஃப்ளோயிங் சில்வர், சில்க் பர்பிள், வெல்வெட் கிரீன் மற்றும் சில்க் பிங்க்.

சாஃப்ட்வேரை பொறுத்தவரை, ரியல்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்கள் வழியாக அதன் புதிய ஏஐ அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இதில் "தொழில்துறைக்கு முதல் முறையான" ஏஐ எடிட் ஜீனி (AI Edit Genie) அம்சமும் அடங்கும். இது பயனர்களின் வாய்ஸ் கமாண்ட்களை பயன்படுத்தி புகைப்படங்களை எடிட் செய்ய அனுமதிக்கிறது.

மேலும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட மொபைல் கேமிங்கிற்காக ஏஐ கேமிங் கோச் 2.0 (AI Gaming Couch 2.0) மற்றும் ஏஐ அல்ட்ரா டச் கண்ட்ரோல் (AI Ultra Touch Control) ஆகிய அம்சங்களும் இடம்பெறும். இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் மட்டுமே மறைக்கப்பட்டுளன; அதுகுறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என்று ரியல்மி கூறியுள்ளது.

ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் (Realme 15 Pro 5G Price Expected) செய்யப்படலாம்? ஸ்மார்ட்ப்ரைஸ் வலைத்தளத்தின்படி இந்தியாவில் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.27,990 ஆக இருக்கலாம். இருப்பினும் சரியான விலை நிர்ணயம் ஜூலை 24 நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது தான் அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15 Pro 5G 7000mAh battery HyperGlow 4D AMOLED Display India Launch July 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X