Home
Mobile

இதுக்கு தாங்க மொத்தமா வெயிட்டிங்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படியான பீச்சர்களுடன் ரியல்மி 15 லைட் 5ஜி (Realme 15 Lite 5G) களமிறங்க இருக்கிறது. சத்தமே இல்லாமல் அமேசான் தளத்தில் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. ஓஎல்இடி டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி 15 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ஏற்கனவே ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) ஆகிய மாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்களுடன் பட்டையை கிளப்பின. இப்போது, அடுத்த மாடலாக இந்த ரியல்மி 15 லைட் 5ஜி வெளியாக இருப்பது அமேசான் தளத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

இதுக்கு தாங்க மொத்தமா வெயிட்டிங்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. மாடல்?

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கிளிட்ஸ் கோல்டு (Glitz Gold) கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த விலை மட்டுமல்லாமல், கூடுதலாக டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களும் அதில் உறுதியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்களை பார்த்துவிட்டு முன்னதாக வெளியான ரியல்மி 15 5ஜி மாடலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15 லைட் 5ஜி அம்சங்கள் (Realme 15 Lite 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 453 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்க இருக்கிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி டைமன்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி (Dimensity 7300 Energy 5G) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட இருக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு நிகராக IP69 ரேட்டிங் கொண் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. 8.0 எம்எம் தடிமன் மற்றும் 187 கிராம் எடை கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. மற்ற விவரங்கள் தெரியவரவில்லை. அதேபோல அதிகாரப்பூர்வமாக பீச்சர்கள் உறுதி செய்யப்படும்போது, அதில் மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது. இதுபோக விலையிலும் மாற்றங்கள் இருக்கலாம். இப்போது, முன்னதாக வெளியான ரியல்மி 15 5ஜி மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15 5ஜி அம்சங்கள் (Realme 15 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கிடைக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300+ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300+ 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.25,999பட்ஜெட்டில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15 Lite 5G With 50MP Camera 8GB RAM Listed on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X