Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 6300mAh பேட்டரி.. 50MP கேமரா.. இந்தியாவுக்கு வரும் புதிய Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும்.

மார்க்கெட்டே அதிர போகுது.. இந்தியாவுக்கு வரும் புதிய Realme போன்..

அதேபோல் சில்வர், சில்க் பிங், வெல்வெட் கிரீன் நிறங்களில் இந்த ரியல்மி 15 5ஜி மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களில் இருக்கிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரியல்மி போன்கள் வெளிவரும்.

ரியல்மி 15 5ஜி அம்சங்கள்: ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 எஸ்ஒசி (Snapdragon 7 Gen 4 SoC) சிப்செட் வசதியுடன் இந்த புதிய ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதேபோல் அமோலெட் (AMOLED)டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

6300mAh பேட்டரி உடன் ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் 16எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் ரியல்மி 15 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனின் அம்சங்களும் வெளியாகும். அதேபோல் இந்த இரண்டு புதிய ரியல்மி போன்களும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 15 5G teaser released in India: May launch soon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X