Home
Mobile

வேற லெவல்ங்க நீங்க.. Realme-யின் புதிய AI Party Phone.. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி (Realme) நிறுவனம் இரண்டு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவைகள் ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) மாடல்கள் ஆகும். எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ரியல்மி 15 5ஜி, ரியல்மி 15 ப்ரோ 5ஜி - எப்போது அறிமுகம்? ரியல்மி நிறுவனம் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று மட்டுமே அறிவித்துள்ளது; சரியான வெளியீட்டு தேதி (Launch Date) இன்னும் அறிவிக்கப்படவில்லை. எப்படியும் ஜூலை 2025 க்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

வேற லெவல்ங்க நீங்க.. Realme-யின் புதிய AI Party Phone.. என்ன மாடல்?

ரியல்மி 15 5ஜி, ரியல்மி 15 ப்ரோ 5ஜி - என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மேம்பட்ட "ஏஐ பார்ட்டி போன்" (Most advanced AI party phone) ஆக இருக்கும் என்று கூறுகிறது. ஆனால் எந்த முக்கிய அம்சங்களையும் வெளியிடவில்லை. இருப்பினும், இது முன்னதாக ப்ரோ பிளஸ் என்று அழைக்கப்படும் மாடல்களில் பிரத்தியேகமாக இருந்த பிளாக்ஷிப் அம்சங்களுடன் வரும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரியல்மி 15 சீரீஸில் "பார்ட்டி-இன்ஸ்பையர்டு கேமரா அம்சங்கள்" (Party-inspired camera features) இடம்பெறும் என்றும். இது மியூசிக் கச்சேரிகள், நடன தளங்கள் அல்லது வீட்டு விருந்துகள் போன்ற டைனமிக் லைட்டிங் நிலைமைகளுக்கு ஏற்ப ஷட்டர் ஸ்பீட் (Adjusts shutter speed), கான்டராஸ்ட் (Contrast), சாச்சுரேஷன்-ஐ (Saturation) நிகழ்நேரத்தில் சரிசெய்யும் ஏஐ- ஆதரவு இமேஜிங் ஆதரவு (AI-backed imaging) இருக்கும் என்றும் ரியல்மி நிறுவனம் கூறுகிறது

ரியல்மி 15 5ஜி, ரியல்மி 15 ப்ரோ - என்ன விலைக்கு (Realme 15 5G, Realme 15 Pro 5G Price Expected) அறிமுகம் செய்யப்படலாம்? முந்தைய அறிக்கைகளின்படி, ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய 4 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். இது சில்வர், பர்பிள் மற்றும் க்ரீன் ஆகிய 3 கலர்களில் வெளியாகலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.32,990 முதல் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம்.

மறுகையில் உள்ள ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய 4 ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். இது சில்வர், பிங்க் மற்றும் க்ரீன் கலர்களில் வெளியாகலாம். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இது ரூ.19,900 முதல் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம்.

ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் (Realme 15 5G Specifications Expected) என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிளாட் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் (Snapdragon 7 Gen 4 SoC) மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 32 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme 15 5G Realme 15 Pro 5G With Party inspired camera Features India Launch Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X