Home
Mobile

7 மணிக்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 4D கர்வ்ட் டிஸ்பிளே.. 80W சார்ஜிங்.. Realme 15 5G சீரிஸ் வருது!

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரியல்மி 15 5ஜி (Realme 15 5G) மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி (Realme 15 Pro 5G) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதுவரையில் என்னென்ன பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன, பட்ஜெட் எவ்வளவு இருக்கும், இந்த மாடல்களின் வெளியீட்டை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15 5ஜி சீரிஸ் இந்திய வெளியீடு (Realme 15 5G Series India Launch):
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ரியல்மி 15 சீரிஸ் வெளியாக இருக்கின்றன. ரியல்மி இந்தியாவின் (Realme India) அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறது. ஆகவே, இதில் பீச்சர்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் லைவ் ஸ்ட்ரீமிங் தெரிவிக்கப்படும். இதையடுத்து வழக்கம் போல ரியல்மி இந்தியா வெப்சைட்டில் பீச்சர்கள் பகிரப்படும்.

7 மணிக்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 4D கர்வ்ட் டிஸ்பிளே!

ரியல்மி 15 5ஜி சீரிஸ் இந்திய விற்பனை (Realme 15 5G Series India Sale):
இந்த ரியல்மி 15 5ஜி சீரிஸ் மாடல்கள் வெளியான பிறகு விற்பனை தேதி அறிவிக்கப்படும். ஆனால், ஏற்கனவே பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்ம் இந்திய ஈ-ஸ்டோர் (Realme India E-store) ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதியாகிவிட்டது. ஆகவே, எந்த தேதியில் விற்பனைக்கு கிடைக்குமோ, அந்த தேதியில் மேற்கண்ட தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த விற்பனை தேதி மற்றும் விலை விவரங்களுடன் அறிமுக சலுகைகள் என்னென்ன கிடைக்கிறது என்பதும் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆகவே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம். இப்போது, இந்த மாடல்களின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் பீச்சர்களை பார்ப்போம்.

7 மணிக்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 4D கர்வ்ட் டிஸ்பிளே!

ரியல்மி 15 5ஜி அம்சங்கள், விலை (Realme 15 5G Specifications, Price):
இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300பிளஸ் (Octa Core MediaTek Dimensity 7300+) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. வாய்ஸ் மூலம் எடிட்டிங் செய்ய ஏஐ எடிட் ஜீனி பீச்சர்கள் கிடைக்கிறது. 7,000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்க இருக்கிறது.

7.66 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஏஐ பார்ட்டி மோட், ஏஐ மேஜிக் க்ளோவ் 2.0 போன்ற பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 4டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளது. இந்த போன் ரூ.25,000 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது.

7 மணிக்கு அப்புறம் இதுதான்.. 7000mAh பேட்டரி.. 4D கர்வ்ட் டிஸ்பிளே!

ரியல்மி 15 ப்ரோ 5ஜி அம்சங்கள், விலை (Realme 15 Pro 5G Specifications, Price):
இந்த ரியல்மி ப்ரோ மாடலில் 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி செல்பீ கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. இந்த போனிலும் 7,000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. அதேபோல 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 4டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வர இருக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Octa Core Snapdragon 7 Gen 4) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. இந்த ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனில் வெல்வெட் கிரீன், ப்ளோயிங் சில்வர் மற்றும் சில்க் பர்பிள் ஆகிய மூன்று கலர்கள் கிடைக்க இருக்கின்றன. இது ரூ.30,000 பட்ஜெட்டில் வர இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15 5G Realme 15 Pro 5G Launching Today 7PM Here's What to Expect And How to Watch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X