Home
Mobile

ரியல்மி 15 5ஜி மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 15 5ஜி மற்றும் ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரியல்மி போன்கள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி 15 5ஜி அம்சங்கள்: 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வதியுடன் இந்த புதிய ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் (100% DCI-P3 color gamut), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection)) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ரியல்மி 15  5ஜி, ரியல்மி 15 ப்ரோ 5ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகம்..

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 பிளஸ் (Octa Core MediaTek Dimensity 7300+) 4என்எம் சிப்செட் உடன் இந்த புதிய ரியல்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ரியல்மி போனில் உள்ளது.

50எம்பி சோனி ஐஎஎம்எக்ஸ்882 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 15 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் ஆதரவுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ,யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio),
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor), 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ்,க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் ரியல்மி 15 5ஜி போனில் உள்ளன.

ரியல்மி 15 ப்ரோ 5ஜி அம்சங்கள்: 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வதியுடன் இந்த புதிய ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் (100% DCI-P3 color gamut), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய ரியல்மி 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ரியல்மி போனில்உள்ளது.

50எம்பி சோனி ஐஎஎம்எக்ஸ்896 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 15 ப்ரோ 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் ஆதரவுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Optical Fingerprint Sensor), 5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல அம்சங்கள் ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனில் உள்ளன.

ரியல்மி 15 5ஜி விலை: 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 15 5ஜி போனின் விலை ரூ.25,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.27,999 விலையிலும், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.30,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும். உள்ளது.

ரியல்மி 15  5ஜி, ரியல்மி 15 ப்ரோ 5ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகம்..

ரியல்மி 15 ப்ரோ 5ஜி விலை: 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 15 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.33,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.35,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரூ.38,999 விலையிலும் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும்.

வரும் ஜூலை 30-ம் தேதி பிளிப்கார்ட், ரியல்மி.காம் தளங்களில் இந்த புதிய ரியல்மி போன்களை வாங்க முடியும். இந்த போனின் முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15 5G and Realme 15 Pro 5G launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X