Home
Mobile

ஒரு Pro மாடல், ஒரு பட்ஜெட் மாடல்.. Realme-யின் 2 புதிய போன்கள்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ரியல்மி நிறுவனம் பேக்-டூ-பேக் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்று ரியல்மி 14 ப்ரோ (Realme 14 Pro) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 19 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்று ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ரியல்மி 13 ப்ரோ (Realme 13 Pro) ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன இது இந்த வார இறுதியில் சர்வதேச சந்தைகளில் அறிமுகமாகும் அதே வேளையில்.. இன்னும் சொல்லப்போனால் அதற்கும் முன்பாக இன்னொரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போனும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஒரு Pro மாடல், ஒரு பட்ஜெட் மாடல்.. Realme-யின் 2 புதிய போன்கள்!

அது ரியல்மி 14எக்ஸ் (Realme 14x) ஸ்மார்ட்போனாகும். இது டிசம்பர் 18 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ரியல்மி 13 சீரீஸில் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலும் உள்ளது என்றாலும் கூட, அது ரியல்மி 13 ப்ரோ உடன் அறிமுகம் ஆகாது; மாறாக இது சில வாரங்கள் கழித்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸ் தளம் வழியாக பகிரப்பட்ட ரியல்மி 14 ப்ரோ போஸ்டரின்படி, இது கோபன்ஹேகனில் டிசம்பர் 19 அன்று நடக்கும் ஒரு ஊடக நிகழ்வில் வெளியிடப்படும். இதுகுறித்த போஸ்டரில் 'டிசைன் மீட்ஸ் இன்னோவேஷன்' என்ற டேக்லைனை காணமுடிகிறது. ஆனால் இந்த வெளியீட்டு நிகழ்வின் நேரத்தை ரியல்மி இன்னும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், RMX5050 என்கிற மாடல் நம்பரை கொண்ட மற்றொரு ரியல்மி ஸ்மார்ட்போன் சீனாவின் 3சி இணையதளத்தில் காணப்பட்டதாக 91மொபைல்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது ரியல்மி 14 ப்ரோ பிளஸ் மாடலாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்குகிறது.

மேலும் இது 50 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 50-மெகாபிக்சல் 1/1.95-இன்ச் சோனி IMX882 டெலிஸ்கோப் டெலிஸ்கோப் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 14 ப்ரோ 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்களில் இயங்கும் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 14எக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதும் இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவுடன் அனுப்பப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது MIL-STD-810 ஆயுள் மதிப்பீட்டை வழங்குவதாகவும் டீஸ் செய்யப்படுகிறது.

மேலும் இது 50-மெகாபிக்சல் கேமரா, 18ஜிபி வரையிலான ரேம் (டைனமிக் ரேம் உட்பட) மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும். பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக இது ஐபி69-ரேடட் கட்டமைப்பையும் கொண்டிருக்கும்.

விலை நிர்யணத்தை பொறுத்தவரை ரியல்மி 14எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை நிர்ணயம் டிசம்பர் 18 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது அறிவிக்கப்படலாம்.

ரியல்மி 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது இது ரூ.34,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14X India Launch on December 18 Realme 14 Pro Global Launch on December 19 Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X