மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.14,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்த பட்ஜெட்டுக்கு இப்படிவொரு பீச்சர்கள் கிடைக்காது என்று அடித்து சொல்லும்படியான விலைக்கு IP69 வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 45W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G) போன் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி புது விலை (Realme 14X 5G New Price): இந்த ரியல்மியின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இப்போது, எந்தவொரு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக ஆர்டர் செய்தாலும் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

இதுபோக பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மூலம் ஆர்டர் செய்தால் ரூ.1,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனை ரூ.14,999 பட்ஜெட்டில் இப்போது வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு IP69 வாட்டர் ப்ரூஃப் மற்றும் மிலிட்டரி கிரேடு வருகிறது.
ஆகவே, ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Shock Resistance), ரெயின் (Rain), ஸ்பிளாஷஸ் (Splashes) மற்றும் டிராப்ஸ் (Drops) ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆல்-ரவுண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால் மிட்-ரேஞ் மாடல்களுக்கு நிகரான பில்ட் குவாலிட்டி கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் எப்படி இருக்கிறது?
ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14X 5G Specifications): இந்த ரியல்மி போனில் 6.67 இன்ச் (720 × 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் .ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
இதுபோக 180Hz டச் சாம்பிளிங் ரேட், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் இந்த போனில் வருகிறது.
ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ரியல்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் மற்றும் 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த மாடலுக்கும் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்கள் விரும்பும் பேக்கப் கொடுக்க 6000mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பெரிய பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது. பிரீமியம் மாடல்களை போல கம்போர்ட் கொடுக்க 7.94 எம்எம் தடிமனுடன் ஹேண்டி பாடி வருகிறது. இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் ஓவி50டி (OV50D) சென்சார், ஆட்டோ போகஸ் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
2 எம்பி செகண்டரி கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது. IP68 டஸ்ட் ரெசிஸ்டன்ட் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் மூன்று பிரீமியம் கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








