Home
Mobile

வெளுக்குது விற்பனை.. ரூ.15,000 கூட இல்ல.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G) போன் கிடைக்கிறது. மலிவான விலையிலும் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான டியூரபிலிட்டி கொடுக்கிறது. அதாவது, மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (MIL-STD 810H சர்டிபிகேஷன்) மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. ஆகவே, ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் டிஸ்பிளே சப்போர்ட் கிடைக்கிறது. முழு பீச்சர்களுக்கு முன்பு விலையை பார்ப்போம்.

வெளுக்குது விற்பனை! ரூ.15,000 கூட இல்ல.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. ஆனால், ரூ.1,000 உடனடி தள்ளுபடி போக ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. இந்த வேரியண்ட்டுக்கும் ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். இந்த பேங்க் தள்ளுபடியை பெறுவதற்கு மல்டிபிள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இருப்பினும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.1,700 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஆர்டர் செய்யலாம்.

இந்த பட்ஜெட்டிலும் பிரீமியம் மாடல்களுக்கு நிகரான டிசைனில் கிரிஸ்டல் பிளாக் (Crystal Black), கோல்டன் க்ளோவ் (Golden Glow) மற்றும் ஜூவல் ரெட் (Jewel Red) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது. டயமண்ட் பேக் பேனல் டிசைனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கிறது. 7.94 எம்எம் தடிமனில் ஸ்லமிம் லுக் கொடுக்கிறது.

வெளுக்குது விற்பனை! ரூ.15,000 கூட இல்ல.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14X 5G Specifications): 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 10 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட்டை கொடுக்கிறது. ஹைபிரிட் சிம் மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் கிடைக்கிறது.

இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் கிடைப்பதால், சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14X 5G With 6GB RAM Available At Discounted in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X