டிச.18-க்கு வருது.. ரூ.15000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP69 ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
இந்திய ரியல்மி பிரியர்களை வெயிட்டிங் மோடில் காத்திருக்க வைக்கும்படியான பட்ஜெட் செக்மெண்ட்டில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 ரெசிஸ்டன்ட் பீச்சர்கள் மட்டுமல்லாமல், டயமன்ட் பேக் பேனல் லுக் கொடுக்கும் டிசைனில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14x 5G) வெளியாக இருக்கிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் IP69 ரெசிஸ்டன்ட் கொடுக்கும் முதல் மாடலாக இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி இருக்கப் போகிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி, பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.
ரியல்மி போன்களுக்கு இந்திய மார்கெட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பட்ஜெட் போன்களை பிரீமியம் லுக் மற்றும் டிசைனில் கொடுப்பதால், தனி இடம் பிடித்திருக்கிறது. இப்போது, வெளியாக இருக்கும் ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனும் அப்படித்தான் பிரீமியம் லுக்கில் டயமன்ட் டெக்சர் பேக் பேனல் கொடுக்கும் டிசைனில் வெளியாக இருக்கிறது.

டிசம்பர் 18ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. வெளியீட்டு தேதி நெருங்குவதால், இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வருகின்றன. இப்போது, பட்ஜெட் விவரங்கள் வந்துள்ளது.
இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனானது, ரூ.15000 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் IP69 ரெசிஸ்டன்ட் கொடுக்கும் முதல் மாடலாக இது இருப்பதாகவும் ரியல்மி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ரெயின் (Rain), ஸ்பிளாஷஸ் (Splashes) மற்றும் டிராப் (Drop) ரெசிஸ்டன்ட் பெற்று கொள்ளலாம்.
ஆகவே, வாட்டர் டிராப் ரெசிஸ்டன்ட், ஹாட் வாட்டர் ஸ்பில் ரெசிஸ்டன்ட் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்பில் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமல்லாமல் பேட்டரி, கலர் மற்றும் கேமரா பீச்சர்களும் அதிகராப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இந்த பீச்சர்களுடன் மார்கெட்டில் கசிந்து இருக்கும் பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14x 5G Specifications): இந்த ரியல்மி போனில் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது. ஒரு ஃபுல் சார்ஜ் மூலம் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் பெற்று கொள்ளலாம். கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) மற்றும் ஜூவல் ரெட் (Jewel Red) கலர்களில் கிடைக்க இருக்கிறது.
மேலும், கோல்டன் க்ளோவ் (Golden Glow) கலரும் இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பற்றி பார்ப்போம். இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே எதிர்பார்க்கலாம். அதேபோல எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருவது உறுதி, ஏனென்றால் லேட்டஸ்ட் மாடல்களில் இதே ஓஎஸ் வருகிறது. இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனானது, சீனாவில் ஏற்கனவே வெளியான ரியல்மி வி60 ப்ரோ போனை போலவே கலர் மற்றும் டிசைன் கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த போனில் வந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி இதில் கொடுக்க வாய்ப்புள்ளது.
சொல்லப்போனால், இந்த ரியல்மி வி60 ப்ரோவின் இந்திய வெர்ஷனாக ரியல்மி 14எக்ஸ் 5ஜி வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா வருவது உறுதியாகும். இந்த போனின் டிசைனிலேயே அது தெரிகிறது. ஆனால், கேமரா சென்சார் மற்றும் செகண்டரி கேமரா பற்றிய விவரங்கள் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








