செய்கைனா இதுதான்.. ரூ.13,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 12GB ரேம்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. பிரீமியம் மாடல்களுக்கு நிகராக IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர்ப்ரூப் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 45W சார்ஜிங் கொடுக்கிறது. மேலும், 6000mAh பேட்டரி கொடுத்து ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் லுக் வேண்டுமானால், இதை தாராளமாக வாங்கி கொள்ளலாம். டயமண்ட் கிளிட்டரிங் டிசைனில் ஜூவல் ரெட் (Jewel Red), கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) மற்றும் கோல்டன் குளோவ் (Golden Glow) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த டிசைன் மட்டுமல்ல, IP69 ரேட்டிங் கொடுத்து, டாப் லெவல் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுத்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ட் (Military-Grade Shock Resistance) பெற்று கொள்ளலாம். டிஸ்பிளேவுக்கு கிளாஸ் புரொடெக்சன் கிடையாது. இருப்பினும், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, லுக் மற்றும் டிசைனில் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. விலை எப்படி?
ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது ரூ.1,000 உடனடி தள்ளுபடி போக வாங்க கிடைக்கிறது. குறிப்பிட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே இந்த உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.10,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் உள்ளது.
ஆகவே, ரூ.13,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அதேபோல ரூ.15,999 விலை கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கும் ரூ.1,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. குவாலிட்டி மற்றும் பட்ஜெட் பக்காவாகவே இருக்கிறது. இருப்பினும், மற்ற பீச்சர்களை பார்க்க வேண்டும்.

ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14X 5G Specifications): தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட்டில் கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) கொடுக்கப்பட்டுள்ளது. டாப் பீச்சராக 6000mAh பேட்டரி மற்றும 45W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.
இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி லென்ஸ் உள்ளது. 8 எம்பி செல்பீ கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங், நைட் போட்டோகிராபி, போர்ட்ராய்டு போட்டோகிராபி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. டூயல் 5ஜி கனெக்டிவிட்டி கொடுக்கிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் உள்ளது.


Click it and Unblock the Notifications








