ஆர்டர் போட்ருங்க.. ரூ.14,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. அறிமுகமானது ரியல்மி 5ஜி போன்..
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி (realme 14X 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஐபி69 ரேட்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14x 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720×1604 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் ரியல்மி 14எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். எனவே இந்த சாதனத்தை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.
50எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. அதேபோல் realme UI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் அல்ட்ரா லீனியர் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Ultra Linear Bottom-ported Speaker)வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
6000mAh பேட்டரி உடன் ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட் பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனில் உள்ளன. ஜூவல் ரெட் (Jewel Red), கிரிஸ்டல் பிளாக் (Crystal Black) மற்றும் கோல்டன் க்ளோ (Golden Glow) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி போன். மேலும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 14எக்ஸ் 5ஜி போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
ரியல்மி.காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க கிடைக்கும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.
photo credit: fonearena, Realme


Click it and Unblock the Notifications








