டக்குனு தூக்குங்க.. ரூ.13,249-க்கு 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) என்னும் சிறப்பு விற்பனையில் 6000mAh பேட்டரி கொண்ட ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G) ஸ்மார்ட்போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் பிரீமியம் டியூரபிலிட்டி கொடுக்கும் பாடி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் டிஸ்பிளே போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 6 ரேம் மாடலானது ரூ.14,249 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் மாடலானது ரூ.15,199 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

ஆகவே, முறையே ரூ.750 மற்றும் ரூ.800 நேரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ டெபிட் கார்டுக்கு ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ரூ.13,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14X 5G Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் அதற்கு கிடைக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கும்.
அதேபோல ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கொடுக்கப்படுகிறது. ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் கொண்ட 6.67 இன்ச் (720 x 1604 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்படுகிறது.
மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் மட்டுமல்லாமல், இந்த ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இது மிட்-ரேஞ்ச் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் ரெசிஸ்டன்ட்டாக இருக்கிறது.
இதுபோக MIL-STD 810H என்னும் மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. ஆகவே, ஷாக் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டர் மற்றும் கோல்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும். இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
கிரிஸ்டல் பிளாக் (Crystal Black), ஜூவல் ரெட் (Jewel Red) மற்றும் கோல்டன் க்ளோவ் (Golden Glow) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15X 5G) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இதில் 7000mAh பேட்டரி, 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்டாராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








