அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 6000mAh பேட்டரி.. சோனி கேமரா.. வருகிறது புது Realme போன்.. எந்த மாடல்?
ரியல்மி (Realme) நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிக ஸ்மார்ட்போன்களை இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ள ரியல்மி நிறுவனம்.
அதாவது ரியல்மி 14டி (Realme 14T) எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி 14டி அம்சங்கள் (Realme 14T Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி 14டி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 14டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
Realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி 14டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய போன் வெளிவரும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி 14டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இந்த ரியல்மி 14டி ஸ்மார்ட்போன் 50எம்பி OmniVision OV50D பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி 14டி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். அதேபோல் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பிங்க்,கிரீன், பிளாக் நிறங்களில் இந்த புதிய ரியல்மி 14டி வாங்க கிடைக்கும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய ரியல்மி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








