Home
Mobile

ஏப்.25 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும் ஏப்ரல் 25ஆம் தேதி முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. பட்ஜெட்டில் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, 50 எம்பி மெயின் கேமரா மட்டுமல்லாமல், IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக ரியல்மி 14டி 5ஜி (Realme 14T 5G) வெளியாக இருக்கிறது. இந்த ரியல்மி போனின் பீச்சர்கள் எப்படி? விலை எப்படி இருக்கும்? முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி இந்தியா நிறுவனமானது இப்போது பட்ஜெட் மாடல்களில் கவனம் செலுத்தி வருகிறது. ரூ.20,000 பட்ஜெட்டில் ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி மற்றும் ரூ.15,000 பட்ஜெட்டில் ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி போன்களை களமிறக்கியது. இந்த போன்கள் விற்பனையில் பட்டையை கிளப்பு வரும் நேரத்தில் அதே கம்மி பட்ஜெட்டில் ரியல்மி 14டி 5ஜி மாடலை களமிறக்க இருக்கிறது.

ஏப்.25 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங் மாடல்!

இந்த புதிய போன் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த போனின் பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இப்போது, ரியல்மி இந்தியா நிறுவனமே உறுதி செய்த பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 14டி 5ஜி அம்சங்கள் (Realme 14T 5G Specifications): இந்த ரியல்மி போனில் செக்மெண்ட் ஃபர்ஸ்ட் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கிடைக்க இருக்கிறது. பட்ஜெட்டைவிட கூடுதல் ரெசிஸ்டன்ட் வருகிறது.

ஆகவே, IP69 ரேட்டிங், IP68 ரேட்டிங் & IP66 ரேட்டிங் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, ட்ராப்ட் வாட்டர், ட்ராப்ட் பூல், வாட்டர் ஜெட் மற்றும் ஹாட் வாட்டர் வாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கும். இந்த ரியல்மி 14டி 5ஜி போனில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்க இருக்கிறது.

ஏப்.25 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங் மாடல்!

இந்த பெரிய பேட்டரியை பேக் செய்தும் வெறும் 7.97 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த போன் ஸ்லிம் மாடலை விரும்பும் கஸ்டமர்களுக்கும் பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல பிரீமியம் லுக் கொடுக்கும்படி சாடின் (Satin) பேக் பேனல் டிசைனில் சில்க் கிரீன் (Silken Green), வயலெட் கிரேஸ் (Violet Grace) மற்றும் சாடின் ஈங்க் (Satin Ink) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இருப்பினும், ரேம், மெமரி மற்றும் சிப்செட் பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. அதன்படி இந்த ரியல்மி 14டி 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (MediaTek Dimensity 6300 SoC) கிடைக்க இருக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வர இருக்கிறது. 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆகவும், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme 14T 5G With 50MP Camera To Launch in India on April 25 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X