அதிர போகுது மார்க்கெட்.. ரூ.17,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி 14டி 5ஜி (Realme 14T 5G ) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த போன் Geekbench தளத்தில் காணப்பட்டது. எனவே இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் இந்திய விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையிலும், பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.18,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி 14டி 5ஜி அம்சங்கள் (Realme 14T 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவரும்.
மீடியடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் ( MediaTek Dimensity 6300 chipset) வசதியுடன் ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
இந்த ரியல்மி 14டி 5ஜிஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். எனவே போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8பி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்களில் ரியல்மி 14டி 5ஜிஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ரியல்மி 14டி 5ஜிஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ) உடன் ரியல்மி 14டி 5ஜிபோன் அறிமுகமாகும்.
6000mAh பேட்டரி உடன் ரியல்மி 14டி 5ஜிபோன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications








