Home
Mobile

வெளுக்குது ஆர்டர்.. ரூ.15,759 போதும்.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரியல்மி 15டி 5ஜி (realme 15T 5G) ஸ்மார்ட்போன் வெளியாகியதை அடுத்து முந்தைய மாடலான ரியல்மி 14டி 5ஜி (realme 14T 5G) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. அமேசான் தளத்தில் விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் போக மேலும் கம்மியான விலைக்கு இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரியல்மி 14டி 5ஜி ஸ்மார்ட்போனின் மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டானது ரூ.16,299 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

வெளுக்குது ஆர்டர்.. ரூ.15,759 போதும்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆகவே, நேரடியாக மார்கெட் விலையில் இருந்து ரூ.1,700 விலை குறைப்பு போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் ஆர்டர் செய்தால், ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த சலுகையை பெற்றால், ரூ.15,759 விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

மேலும், ரூ.15,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் மற்றும் விலை குறைப்பு ஆகிய சலுகைகள் சர்ப் கிரீன் (Surf Green) கலர் மாடலுக்கு கிடைக்கிறது. இதுபோக அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் லைட்னிங் பர்பிள் (Lightning Purple) ஆகிய கலர்களும் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 14டி 5ஜி அம்சங்கள் (Realme 14T 5G Specifications): இந்த ரியல்மியில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் உள்ளது.

வெளுக்குது ஆர்டர்.. ரூ.15,759 போதும்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. இதில் பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். மேலும், ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதிக பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டூயர் ரியர் செட்டப் உள்ளது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OmniVision OV50D40) சென்சார் வருகிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கவில்லை, இருப்பினும், ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மேலும், ரியல்மி 15டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், , 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme 14T 5G Gets Price Drop After Realme 15T 5G Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X