Home
Mobile

பயப்படுறீயா குமாரு.. பேக் அடிச்ச Realme நிறுவனம்.. 14 என்பது ராசி இல்லாத நம்பர்.. ஆகையால்?

மிகவும் சமீபத்தில் தான் (ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தான்) ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக ரியல்மி 13 ப்ரோ (Realme 13 Pro) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus) மாடல்கள் இந்திய விற்பனையை தொடங்கின. மேலும் இதே சீரிஸின் வெண்ணிலா வேரியண்ட் ஆன ரியல்மி 13 5ஜி (Realme 13 5G) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் இந்த பிரபலமான நம்பர் சீரீஸின் அப்கிரேட்டட் வெர்ஷன்கள் ஆனது ரியல்மி 14 சீரீஸ் தான் என்று நீங்கள் நினைத்தால், அது தவறாக இருக்கலாம். 91மொபைல்ஸ் (91Mobiles) வழியாக வெளியான லேட்டஸ்ட் அறிக்கையின்படி ரியல்மி நிறுவனமானது ரியல்மி 14 சீரிஸை தவிர்த்துவிட்டு நேராக ரியல்மி 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்.

பேக் அடிச்ச Realme நிறுவனம்.. 14 என்பது ராசி இல்லாத நம்பர்!

சீனாவில் '14' என்கிற எண் ஆனது கெட்ட சகுனமாக, ஒரு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இதுவே ரியல்மி 14 சீரிஸ் தவிர்க்கப்படுவதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த தகவல் பல ஆண்டுகளாக ரியல்மி நிறுவனத்தில் இருக்கும் ஒரு நிர்வாகியால் பகிரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரியல்மி 15 சீரிஸ் மிகவும் வித்தியாசமான கேமரா வடிவமைப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சீரிஸில் வட்ட வடிவிலான கேமரா செட்டப் உள்ளது, ஆனால் இது ரியல்மி 15 சீரீஸ் உடன் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சீரீஸ் உடன் ரியல்மி நிறுவனம் முழு வடிவமைப்பையும் மாற்ற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளன? ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 ஓஎஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், அட்ரினோ 710 ஜிபியு, 12 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் 1 / 1.56-இன்ச் சோனி LYT-701 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் + f/1.88 அபெர்க்ஷர்) + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 8-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இதன் கேமரா செட்டப்பில் ஏஐ ஆடியோ ஜூம், ஏஐ குரூப் மேம்பாடு மற்றும் ஏஐ ஸ்மார்ட் ரிமூவல் போன்ற பல ஏஐ அடிப்படையிலான அம்சங்களும் உள்ளன, கடைசியாக இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.

மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ரோ பிளஸ் மாடலில் உள்ள அதே டூயல் சிம், சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட் ஆகியவற்றை தான் கொண்டுள்ளது. ஆனால் இது OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராவிலும் வேறுபாடுகள் உள்ளன. இது 50-மெகாபிக்சல் (சோனி LYT-600 1 / 1.95-இன்ச் சென்சார் மற்றும் ஓஐஎஸ்) + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.

முன்பக்கத்தில் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் உள்ளதை போலவே 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. மேலும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக இது 45W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.

என்ன விலை? ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.29,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.31,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.33,999 க்கும் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.23,999 க்கு, 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.25,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.28,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Source: 91Mobiles

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14 Series May not Launch Because number 14 considered ominous in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X