Home
Mobile

ஜன.16-க்கு வருது.. பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. சம்பவம் உறுதி.. ரியல்மி 14 ப்ரோ சீரிஸ்!

இந்தியாவில் இருக்கும் ரியல்மி பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் (Realme 14 Pro Series) நாளை வெளியாக இருக்கிறது. உலகின் முதலாவது கோல்ட்-சென்சிடிவ் கலர் சேஞ்சிங் பேனல் மட்டுல்லாமல், குவாட் கர்வ்ட் டிஸ்பிளே, டிரிபிள் ஃபிளாஷ் கேமரா போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்க இருக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை எப்படி இருக்கும்? முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டிஸ்பிளே, கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கும் ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் நாளை இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு சில பீச்சர்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன. இவற்றை முதலில் பார்ப்போம்.

ஜன.16-க்கு வருது.. பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி!

ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அம்சங்கள் (Realme 14 Pro Series Specifications): ரியல்மி 14 ப்ரோ (Realme 14 Pro) மற்றும் ரியல்மி 14 ப்ரோ பிளஸ் (Realme 14 Pro Plus) ஆகிய 2 மாடல்களில் இதில் வெளியாக இருக்கிறது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளேவை (Quad Curved Display) கொடுக்கின்றன. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

உலகிலேயே முதல் முறையாக டிரிபிள் ஃபிளாஷ் சப்போர்ட் கொண்ட கேமரா சிஸ்டம் இந்த மாடல்களில் கிடைக்க இருக்கிறது. அதேபோல கோல்ட்-சென்சிடிவ் கலர் சேஞ்சிங் பேக் பேனல் கொண்ட மாடலாகும் இந்த சீரிஸ் இருக்கிறது. ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் இந்த கலர் சேஞ்சிங் பேக் பேனல் கிடைக்க இருக்கிறது. 7.55 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடி உள்ளது.

ரியல்மி 14 ப்ரோ போனில் சூடே கிரே (Suede Grey), ஜெய்ப்பூர் பிங்க் (Jaipur Pink) மற்றும் பிகானர் பர்பிள் (Bikaner Purple) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) சிப்செட் கிடைக்க இருக்கிறது. அதேபோல 6,000mAh பேட்டரி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றன.

இந்த சீரிஸ் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரியல்மி 14 ப்ரோ மாடலானது, ரூ.26,999 பட்ஜெட்டிலும், ரியல்மி 14 ப்ரோ பிளஸ் மாடலானது ரூ.30,999 பட்ஜெட்டிலும் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போன் சீனாவில் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அங்கு ஆரம்ப விலை ரூ.30,450 பட்ஜெட்டில் இருக்கிறது.

ஆகவே, இந்தியாவிலும் இதே விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனின் சீன வேரியண்ட்டின் பீச்சர்களை பார்ப்போம். இந்த பீச்சர்கள் இந்திய வேரியண்ட்டில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பிளஸ் மாடலில் 6.83 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 120X ஜூமிங் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. மேலும், 32 எம்பி செல்பீ கேமரா, அண்டர் வாட்டர் ஷூட்டங் சப்போர்ட் உள்ளது. இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14 Pro Series To Launch in India on January 16 Check Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X