Home
Mobile

பிளிப்கார்ட் மிரளுது.. ரூ.27999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 120X ஜூம்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவின் ரியல்மி பிரியர்கள் காத்திருந்த நேரம் இப்போது வந்துவிட்டது. சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 120X டிஜிட்டல் ஜூமிங், 6X இன்-சென்சார் ஜூமிங், 1.5K ரெசொலூஷன், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் ரியல்மி 14 ப்ரோ பிளஸ் (Realme 14 Pro Plus) போனின் விற்பனை தொடங்கிவிட்டது.

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) உடனடி டிஸ்கவுண்ட் போக இப்போது ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. இந்த வேரியண்ட்களுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் மிரளுது.. ரூ.27999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா!

ஆனால், ரூ.34,999 விலை கொண்ட 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டில் ரூ.4000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 ஆரம்ப விலையில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல 12 ஜிபி ரேம் மாடலை ரூ.30,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மல்டிபிள் பேங்க் டெபிட் & கிரெடிட் கார்டுகளுக்கு இந்த உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் பிரீமியம் நைட் போட்டோகிராபி அவுட்புட் எதிர்பார்க்கும்படி டிரிபிள் ரியர் ஃபிளாஷ் சப்போர்ட் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் உள்ளது. 8 எம்பி அல்டாரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா வருகிறது.

இந்த பெரிஸ்கோப் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார், 6X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 6.83 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளேவானது, 1.5K ரெசொலூஷனுடன் கிடைக்கிறது. இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளது.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைப்பதால், பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஏனென்றால், அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 7s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. ஏஐ கேமரா பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) பேக் செய்துள்ளது.

லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் கேமிங் பிரியர்கள் எதிர்பார்க்கும்படி பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. பட்டையை கிளப்பும்படி பேக்கப் கொடுக்க 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பெரிய பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

32 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இருக்கிறது. IP66 ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் கொடுத்து மிரள விட்டுள்ளது. கலர்-சேஞ்சிங் பேக் கொடுக்கும் பேர்ல் ஒயிட் கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும், பர்பிள் மற்றும் கிரே கலர்களில் ஆர்டருக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14 Pro Plus With 8GB RAM Sale Under Rs 28000 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X