யாரு சாமி அவன்.. ரூ.30,450 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 120X ஜூமிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 120X ஜூமிங், சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கொண்ட டெலிபோட்டோ கேமரா, 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி சிப்செட் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ரியல்மி 14 ப்ரோ பிளஸ் (Realme 14 Pro Plus) வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாக இருக்கும் இந்த ரியல்மி போனின் விவரங்கள் இதோ.
ரியல்மி 14 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Realme 14 Pro Plus Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கிடைக்கிறது. பின்னி எடுக்கும்படி பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Octa Core 4nm Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட்டை பேக் செய்துள்ளது.

இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டிலும் பிரீமியம் போன்களில் கிடைக்கும் கேமரா சென்சார்கள் மற்றும் பீச்சர்களை கொடுக்கிறது. ஏனென்றால், 120எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 6எக்ஸ் இன்-சென்சார் ஜூமிங் கொடுக்கிறது. டிரிபிள் ரியர் செட்டப் வருகிறது.
ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுடன் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவும் பேக் செய்துள்ளது.
32 எம்பி செல்பீ கேமராவிலும் சோனி சென்சார் கிடைக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களை போலவே ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் 6.83 (2800 x 1272 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. பக்கா பேக்கப் எதிர்பார்க்கும்படி 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
டிஸ்பிளேவுக்கு ஏற்ற ஆடியோ அவுட்புட் கொடுக்கும்படி ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. பிரீமியம் டிஸ்பிளே மற்றும் பாடி வருவதால், மூன்று ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, IP66 ரெசிஸ்டன்ட் மற்றும் IP68 + IP69 ரெசிஸ்டன்ட் கொடுக்கப்படுகிறது. ஆடியோ டைப்-சி போர்ட்டில் கிடைக்கிறது.
இந்த ரியல்மி 14 ப்ரோ பிளஸ் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 30,450ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 32,800ஆக இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இதே விலைக்கு இங்கும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








