Home
Mobile

அப்படி போடு.. இனி இந்த Realme 5ஜி போனை செம ஆபரில் அள்ளலாம்.. சோனி கேமரா... 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 14 Pro Plus 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 6000mAh பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.22499 விலையில் வாங்கிவிட முடியும்.

அப்படி போடு.. இனி இந்த Realme  5ஜி போனை செம ஆபரில் அள்ளலாம்..

ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro Plus 5G Specifications): 6.83-இன்ச் புல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800 x 1272 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Octa Core 4nm Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் உடன்
ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

50 எம்பி சோனி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 5ஜி போன். குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போன்.

அப்படி போடு.. இனி இந்த Realme  5ஜி போனை செம ஆபரில் அள்ளலாம்..

6000mAh பேட்டரி உடன் ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14 Pro Plus 5G with 8GB RAM available at 33 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X