தீபாவளி அதிரடி ஆபர்.. சோனி கேமரா.. IP65 ரேட்டிங்.. கம்மி பட்ஜெட்டில் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Great Indian Festival Sale) நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி (Realme 14 Pro Lite 5G) ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது இந்தியாவில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி போன் விலை ரூ.21,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,990 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரியல்மி போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.16740 விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro Lite 5G specifications): ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும், அதேசமயம் சிறந்த திரை அனுபவம் இதில் கிடைக்கும்.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி Sony LYT-600 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற HYPERIMAGE+ டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 5200mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, யூ.எஸ்.பி-சி 2.0 போர்ட், டூயல் ஸ்பீக்கர்கள் ஆதரவும் இந்த போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








