வந்துட்டான்யா.. வந்துட்டான்.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி (Realme 14 Pro Lite 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி போனின் விலை மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro Lite 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிபபாக இந்த போன் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும், அதேசமயம் சிறந்த திரை அனுபவம் இதில் கிடைக்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Realme UI 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
50எம்பி Sony LYT-600 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற HYPERIMAGE+ டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேற கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
5200mAh பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, யூ.எஸ்.பி-சி 2.0 போர்ட், டூயல் ஸ்பீக்கர்கள் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 14 ப்ரோ லைட் 5ஜி போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








