ஜன.23 பிச்சிக்கும்.. ரூ.22999 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி பிரியர்கள் எதிர்பார்த்த ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் (Realme 14 Pro Series) இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டது. இதில் ரியல்மி 14 ப்ரோ 5ஜி (Realme 14 Pro 5G) பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, அண்டர் வாட்டர் கேமரா, 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், கலர் சேஞ்சிங் பேனல் பாடியுடன் கிடைக்க இருக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro 5G Specifications): இந்த ரியல்மி போனில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. நைட் போர்ட்ராய்டு (Night Portrait), லைவ் போட்டோ (Live Photo) கிடைக்கிறது.

மேலும், அண்டர்வாட்டர் (Underwater) போன்ற மோட்கள் கிடைக்கின்றன. அதேபோல மேஜிக் குளோவ் டிரிபிள் ஃபிளாஷ் (MagicGlow Tripe Flash) கிடைக்கிறது. இதுபோக ஏஐ பீச்சர்களும் இருக்கின்றன. ஆகவே, ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0 (Ultra Clarity 2.0), ஏஐ ஸ்னாப் மோட் (AI Snap Mode), ஏஐ எரைசர் 2.0 (Eraser 2.0) போன்ற ஏஐ பீச்சர்களை இந்த ரியல்மி பேக் செய்துள்ளது.
இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேலும், 14 ஜிபி டைனாமிக் ரேம் கிடைக்கிறது. டைமன்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி (Dimensity 7300 Energy 5G) சிப்செட், ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.
கேமிங் பிரியர்களுக்கான ஜிடி மோட் (GT Mode) மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கிடைக்கிறது. 6.83 இன்ச் (2392 × 1080) பிக்சல்கள் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவிஸ் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரி வருகிறது.
6000mAh பேட்டரி கேபாசிட்டி மற்றும் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. இந்த ரியல்மி போனில் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), நாய்ஸ் கேன்சலேஷனுடன் (Noise Cancellation) டூயல்-மைக் (Dual-mic) பேக் செய்யப்பட்டுள்ளது. கலர் சேஞ்சிங் பேனல் கொண்ட பேர்ல் ஒயிட் (Pearl White), ஜெய்ப்பூர் பிங்க் (Jaipur Pink) மற்றும் சூடே கிரே (Suede Grey) கலர்களில் கிடைக்க இருக்கிறது.
இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999 ஆகவும் இருக்கிறது. ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 ஆரம்ப விலைக்கு இந்த போனை வாங்கி கொள்ளலாம். இன்று பிரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








