தீபாவளி ஆஃபர் எதுக்கு.. ரூ.6,000 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தீபாவளிக்கு கொடுக்கப்பட்ட ஆஃபரையே தூக்கி சாப்பிடும்படி இப்போது நேரடியாக ரூ.6,000 தள்ளுபடியில் ரியல்மி 14 ப்ரோ 5ஜி (Realme 14 Pro 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த விலைக்கு கலர் சேஞ்சிங் பேக் பேனல் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், IP69 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6,000 பேங்க் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மல்டிபிள் கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.6,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. பேர்ல் ஒயிட் (Pearl White), ஜெய்ப்பூர் பிங்க் (Jaipur Pink) மற்றும் சூடே கிரே (Suede Grey) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதில் பேர்ல் ஒயிட் வேரியண்ட்டின் பேக் பேனல் கலர் சேஞ்சிங் டெக்னாலஜி கொண்டிருக்கிறது.
ரியல்மி 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro 5G Specification): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (Octa Core 4nm MediaTek Dimensity 7300 Energy) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். ரியல்மி யுஐ மூலம் லேட்டஸ்ட் ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி, ஏஐ ஸ்னாப் மோட், ஏஐ எரைசர் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜியுடன் வருகிறது.

2 எம்பி மோனோகுரோம் கேமரா மற்றும் மேஜிக் குளோவ் டிரிபில் பிளாஷ் (MagicGlow Triple Flash) கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த கேமராவுக்கு அண்டர்வாட்டர் மோட் கிடைக்கிறது. ஆகவே, IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது.
இதுபோக மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. 3டி கர்வ்ட் டிசைன் கொண்ட 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமல்லாமல், 240Hz டச் சாம்பிளிங் ரேட் & 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் வருகிறது.
மேலும், 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. இதுபோக கேமிங் பிரியர்களுக்கு 120FPS மற்றும் ஜிடி மோட் (GT Mode) கிடைக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி கிடைப்பதால், 6000 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








