Home
Mobile

எந்த பேங்க் கார்டும் இல்லாமல் ரூ.5000 நேரடி விலை குறைப்பு.. அதுவும் இந்த லேட்டஸ்ட் Realme 5ஜி போன் மீது!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களாக நேற்று (ஜன.6) ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதும், பழைய ரியல்மி 15 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்க்ளின் விலைகள் குறையும் என்று காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இப்போது வரை ஏமாற்றம் தான்.

இந்த கட்டுரையை எழுதும் வரையிலாக ரியல்மி 15 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது எந்த விலை குறைப்பும் இல்லை. மாறாக ரியல்மி 14 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 15 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் குறைகப்பட்ட விலையின் கீழ் வாங்க கிடைக்கின்றன.

எந்த பேங்க் கார்டும் இல்லாமல் ரூ.5000 நேரடி விலை குறைப்பு!

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 15 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த 2025 ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டன. ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் மாடல்கள் ஆனது (இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் மாடல்களை போலவே) கடந்த ஜனவரி 2025 இல் அறிமுகமாகின.

இந்தியாவில் ரியல்மி 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.22,961 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரியல்மி 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.29,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

புதிய ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்க்ளின் விலை மற்றும் விற்பனை தேதி: இந்தியாவில் ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.33,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கடைசியாக உள்ள ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.36,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷன் ரூ.41,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கடைசியாக உள்ள ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மீது அறிமுக சலுகையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி (Realme) ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ரியல்மி 16 ப்ரோ 5ஜி ஆனது Master Gold, Pebble Grey மற்றும் Orchid Purple ஆப்ஷன்களிலும், ப்ரோ பிளஸ் மாடலானது Master Gold, Master Grey மற்றும் Camellia Pink ஆப்ஷன்களிலும் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14 Pro 5G Realme 14 Pro Plus 5G Price Drop in Flipkart Ahead Realme 16 Pro Series Sale in Jan 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X