வாடா செல்லம் உனக்கு தான் வெயிட்டிங்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி (Realme) நிறுவனம் அடுத்து ரியல்மி 14 5ஜி (Realme 14 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த போன் TDRA சான்றிதழ் தளத்தில் RMX5070 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
அதன்படி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இந்த அசத்தலான ரியல்மி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ரியல்மி 14 5ஜி அம்சங்கள் (Realme 14 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இதன் டிஸ்பிேளிவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிங்க், சில்வர் மற்றும் டைட்டானியம் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்களில் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் (Snapdragon 6 Gen 4 chipset) வசதியுடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். பின்பு பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ) உடன் ரியல்மி 14 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
6000mAh பேட்டரி உடன் ரியல்மி 14 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி பட்ஜெட் விலையில் ரியல்மி 14 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: mysmartprice, gizmochina


Click it and Unblock the Notifications








