Home
Mobile

புது Realme 5ஜி போன் அறிமுகம்.. சோனி கேமரா.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 14 5ஜி (Realme 14 5G) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி 14 5ஜி அம்சங்கள் (Realme 14 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், ஏஐ ஐ புரொடெக்சன் (AI Eye Protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

புது Realme 5ஜி போன் அறிமுகம்.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Qualcomm Snapdragon 6 Gen 4 SoC) சிப்செட் உடன் இந்த ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ரியல்மி யுஐ 6 (Realme UI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. குறிப்பாக இந்த போனுக்கு 2 ஒஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ ஏரேசர் (AI Eraser), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

50எம்பி சோனி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (dual stereo speaker)இந்த ரியல்மி போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை
வழங்கும்.

6000mAh பேட்டரி உடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மெக்கா ப்ளூ (Mecha Blue), மெக்கா ஆரஞ்சு (Mecha Orange), மெக்கா சில்வர் (Mecha Silver), ஸ்டோர்ம் டைட்டானியம் (Storm Titanium) மற்றும் பிங்க் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் தற்போது தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொணட ரியல்மி 14 5ஜி போனின் விலை TBH 13,900 (இந்திய மதிப்பில் ரூ.35,250) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 14 5G launched globally: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X