Home
Mobile

இதுதான் புதிய Realme போன்.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. IP69 ரேட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ரியல்மி 14 5ஜி (Realme 14 5G) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம். அதாவது வரும் ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவில் ரியல்மி 14 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆன்லைனில் இந்த போனின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி டூயல் ரியர் கேமரா மற்றுட் ரிங் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான ரியல்மி 14 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இதுதான் புதிய Realme போன்.. 6000mAh பேட்டரி..எந்த மாடல்?

ரியல்மி 14 5ஜி அம்சங்கள் (Realme 14 5G specifications): ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் (Snapdragon 6 Gen 4 chipset) வசதியுடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவரும்.

இந்த ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். எனவே போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்களில் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இதுதான் புதிய Realme போன்.. 6000mAh பேட்டரி..எந்த மாடல்?

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த
ஸ்மார்ட்போனில் உள்ளது. IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ) உடன் ரியல்மி 14 5ஜி போன் அறிமுகமாகும்.

6000mAh பேட்டரி உடன் ரியல்மி 14 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பிங்க், சில்வர் மற்றும் டைட்டானியம் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme 14 5G launch timeline and specifications leaked: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X