Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் போடும் விலையில் Realme 13 5G, Realme 13 Plus 5G அறிமுகம்.. செப்.6 முதல் விற்பனை!

Realme 13 Series 5G Price Specifications: ரியல்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ரியல்மி 13 சீரிஸின் கீழ் ரியல்மி 13 5ஜி (Realme 13 5G) மற்றும் ரியல்மி 13 பிளஸ் 5ஜி (Realme 13 Plus 5G) என்கிற 2 மாடல்கள் இன்று (ஆக.29) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ரியல்மி 13 மற்றும் ரியல்மி 13 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் என்ன? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? இரண்டிற்கும் இடையே என்னென்ன வேறுபாடுகள் உள்ளன? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:

ரியல்மி 13 5ஜி, ரியல்மி 13 பிளஸ் 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போங்களுமே ஒரே வடிவமைப்பை கொண்டிருந்தாலும் கூட வெவ்வேறு சிப்செட்களை பேக் செய்கின்றன. பேஸிக் வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது மற்றும் பிளஸ் வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 SoC) மூலம் இயக்கப்படுகிறது.

Realme 13 5G, Realme 13 Plus 5G அறிமுகம்.. செப்.6 முதல் விற்பனை!

சிப்செட் மற்றும் இதர சில சிறிய மாற்றங்களை தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியானவை தான். 90% ஒற்றுமைகளை கருத்தில் கொண்டு, இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலைகளிலும் கூட பெரிய வித்தியாசம் இல்லை. ரியல்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மறுகையில் உள்ள ரியல்மி 13 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Realme 13 5G, Realme 13 Plus 5G அறிமுகம்.. செப்.6 முதல் விற்பனை!

இரண்டுமே செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் Flipkart, Realme அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக வாங்க கிடைக்கும். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ரியல்மி13 மீது ரூ.1000 மற்றும் ரியல்மி 13 5ஜி மீது ரூ .15000 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ரியல்மி 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வதில் ரூ.3000 க்கும் மேலான பலன்கள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 13 5ஜி அம்சங்கள் (Realme 13 5G Specifications): இது பிளஸ் வேரியண்ட்டை விட சற்று உயரமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Realme 13 5G, Realme 13 Plus 5G அறிமுகம்.. செப்.6 முதல் விற்பனை!

இது 45W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட Realme UI இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் - டார்க் பர்பிள் மற்றும் ஸ்பீட் கிரீன்.

ரியல்மி 13 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Realme 13 Plus 5G Specifications): இது 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவும் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Realme 13 5G, Realme 13 Plus 5G அறிமுகம்.. செப்.6 முதல் விற்பனை!

இது 80W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட Realme UI இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் - டார்க் பர்பிள், ஸ்பீட் கிரீன் மற்றும் விக்டரி கோல்ட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 13 series 5G launched in India Price Specifications Offer First Sale Date Sep 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X