மிரட்டிவிட்டாப்ல.. DSLR முடிந்தது.. 50MP மெயின்.. 50MP டெலிபோட்டோ.. SONY சென்சார்.. AI சிஸ்டம்.. எந்த மாடல்?
சோனி எல்ஒய்டி 701 சென்சா் கொண்ட மெயின் கேமரா, சோனி எல்ஒய்டி 600 சென்சார் கொண்ட பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மட்டுமல்லாமல், ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி, ஏஐ ஸ்மார்ட் ரிமூவல், ஏஐ ப்யூர் பொக்கெ, ஏஐ ஆடியோ ஜூம், ஏஐ குரூப் போட்டோ என்ஹான்ஸ்மென்ட் போன்ற ஏஐ பீச்சர்களுக்காக ஹைப்பர்இமேஜ்பிளஸ் சிஸ்டம் உடன் ரியல்மி 30 ப்ரோ சீரிஸ் (Realme 13 Pro Series) வெளியாக இருக்கிறது. இந்த மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
ரியல்மி 30 ப்ரோ சீரிஸ் அம்சங்கள் (Realme 13 Pro Series Specifications): இந்த போன்களின் கேமரா, சிப்செட், பேட்டரி பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக வருகின்றன. கேமராவை பொறுத்தவரையில் டிரிபிள் ரியர் சிஸ்டம் (Triple Rear System) வருகிறது. அதில் டூயல் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Dual OIS) மற்றும் டூயல் சோனி சென்சார் (Dual Sony Sensor) வருகிறது.

ஆகவே, சோனி எல்ஒய்டி 701 (Sony LYT 701) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஹைப்பர்இமேஜ்பிளஸ் (HyperImage+) என்னும் ஏஐ கேமரா சிஸ்டம் (AI Camera System) வருகிறது. டிஎஸ்எல்ஆர் லெவல் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
இதையே ரியல்மி நிறுவனமும் கிளைம் செய்துள்ளது. ஏஐ சிஸ்டம் வருவதால், ஏஐ பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity), ஏஐ ஸ்மார்ட் ரிமூவல் (AI Smart Removal), ஏஐ குரூப் போட்டோ என்ஹான்ஸ்மென்ட் (AI Group Photo Enhancement) மற்றும் ஏஐ ஆடியோ ஜூம் (AI Audio Zoom) ஆகியவை வருகின்றன.
மேலும், ஏஐ எம்பவர்ட் இமேஜிங் (AI-empowered Imaging) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஏஐ ஹைப்பர்ராவ் அல்கோரிதம் (AI HyperRAM Algorithm), ஏஐ நேச்சுரல் ஸ்கின் டோன் (AI Natural Skin Tone) மற்றும் ஏஐ ப்யூர் பொக்கெ (AI Pure Bokeh) பீச்சர்கள் வருகின்றன. இப்படி ஏராளமான ஏஐ பீச்சர்களை இந்த ரியல்மி 30 ப்ரோ சீரிஸ் கொண்டிருக்கிறது.

இப்போது, பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. விசி கூளிங் சிஸ்டம் (VC Cooling System) வருகிறது. ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 5000mAh பேட்டரி வந்திருந்தது. ஆனால், இந்த சிரீஸ் மாடல்களில் அப்கிரேட் செய்யப்பட்டு 5200mAh பேட்டரி கொடுக்கப்படுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் வருகிறது.
ஆகவே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 5ஜி 4என்எம் எஸ்ஓசி (Octa Core Snapdragon 7s Gen 2 5G 4nm SoC) சிப்செட் வரலாம். அதேபோல ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 எஸ்ஓசி (Octa Core Snapdragon 7 Plus Gen 2) சிப்செட்டும் இடம் பெற வாய்ப்புள்ளது. மிராக்கிள் ஷைன் கிளாஸ் (Miracle Shining Glass) பேனல் கொண்டிருக்கிறது.
அதேோடு சன்ரைஸ் ஹாலோ (Sunrise Halo) டிசைனில் மோனெட் கோல்டு (Monet Gold), மோனெட் பர்பிள் (Monet Purple) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜூலை 30ஆம் தேதி இந்திய மார்கெட்டில் களமிறங்குகிறது. மேற்கூறிய பீச்சர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. விலை விவரங்கள் வெளியாகவில்லை. பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








