Home
Mobile

ஆக.6 முதல் விற்பனை.. பட்ஜெட் விலை.. ஆனா பிரீமியம் அம்சங்கள்.. Realme 13 Pro 5G, Realme 13 Pro Plus அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களாக ரியல்மி 13 ப்ரோ (Realme 13 Pro) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 2 SoC), 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,200mAh பேட்டரி மற்றும் 6.7-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே சைஸ் போன்ற பொதுவான அம்சங்களை கொண்டிருக்கும் இவ்விரு ஸ்மார்ட்போன்களை கேமரா தொடர்பான அம்சங்களில் வேறுபடுகின்றன. அதென்ன வேறுபாடு? என்ன விலை? எப்போது முதல் விற்பனை? என்னென்ன சலுகைகள்? இதோ விவரங்கள்:

என்ன விலை? ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.29,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.31,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு கிரீன் மற்றும் மோனெட் கோல்டு கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஆக.6 முதல் விற்பனை.. Realme 13 Pro 5G,  Realme 13 Pro Plus அறிமுகம்!

மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.23,999 க்கு, 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.25,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ. ரூ.28,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு க்ரீன், மோனெட் பர்பில் மற்றும் மோனெட் கோல்ட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

எப்போது முதல் விற்பனை? இவ்விரு ஸ்மார்ட்போன்களின் எர்லி அக்சஸ் சேல் ஆனது இன்று மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ரியல்மி.காம் (Realme.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக நடக்கும். இதனை தொடர்ந்து இந்த போன்களுக்கான முன்பதிவு ஜூலை 31 ஆம் தேதி மதியம் 12 தொடங்கும் மற்றும் முதல் விற்பனை ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

என்னென்ன அம்சங்கள்? ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 ஓஎஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், அட்ரினோ 710 ஜிபியு, 12 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் 1 / 1.56-இன்ச் சோனி LYT-701 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் + f/1.88 அபெர்க்ஷர்) + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 8-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இதன் கேமரா செட்டப்பில் ஏஐ ஆடியோ ஜூம், ஏஐ குரூப் மேம்பாடு மற்றும் ஏஐ ஸ்மார்ட் ரிமூவல் போன்ற பல ஏஐ அடிப்படையிலான அம்சங்களும் உள்ளன, கடைசியாக இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.

மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ப்ரோ பிளஸ் மாடலில் உள்ள அதே டூயல் சிம், சாஃப்ட்வேர் மற்றும் சிப்செட் ஆகியவற்றை தான் கொண்டுள்ளது. ஆனால் இது OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராவிலும் வேறுபாடுகள் உள்ளன. இது 50-மெகாபிக்சல் (சோனி LYT-600 1 / 1.95-இன்ச் சென்சார் மற்றும் ஓஐஎஸ்) + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது.

முன்பக்கத்தில் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் உள்ளதை போலவே 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. மேலும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கடைசியாக இது 45W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 13 Pro Price Rs 23999 Realme 13 Pro Plus Price Rs 29999 First Sale on Aug 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X