முழுசா ரூ.7000 ஆஃபர்.. செப்.2 ஆர்டர் அள்ள போகுது.. Realme 13 Pro Plus 5G-ன் புதிய Monet Purple கலர் ஆப்ஷன்!
Realme 13 Pro Plus 5G Monet Purple Colour: ரியல்மி நிறுவனம் கடந்த ஜூலை மாத இறுதியில் அதன் 2 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அது ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Pluஸ் 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதில் 'ப்ரோ பிளஸ் வேரியண்ட்' ஆன ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் புதிய கலர் ஆப்ஷனை பெற்றுள்ளது. அது 'மோனெட் பர்பிள்' கலர் ஆகும்.
ஆரம்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் க்ரீன் மற்றும் கோல்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் மட்டுமே வாங்க கிடைத்தது. தற்போது மூன்றாவதாக ஊதா கலர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கலர் ஆப்ஷனின் விலை என்ன? இது எப்போது முதல் வாங்க கிடைக்கும்? விற்பனை சலுகைகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டுள்ளதா? இதோ விவரங்கள்:

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய கலர் ஆப்ஷன், செப்டம்பர் 2 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி இந்தியா (Realme India) இணையதளம் மற்றும் ஆஃப்லைன் மெயின்லைன் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கும்.
விலையை பொறுத்தவரை ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கும் வாங்க கிடைக்கும்.
சலுகைகளை பொறுத்தவரை, செப்டம்பர் 2 ஆம் தேதி நண்பகல் மற்றும் நள்ளிரவு இடையே மோனெட் பர்பிள் வண்ண விருப்பத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 பேங்க் ஆபர் உடன் ரூ.4,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரையும் பெறுவார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இந்த வங்கி சலுகை மேற்க்குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் புதிய ஊதா கலர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
ஒருவேளை செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மோனெட் கோல்ட் அல்லது எமரால்ட் க்ரீன் கலர் ஆப்ஷன்களை நீங்கள் வாங்க விரும்பினால், உங்களுக்கு ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். இதே எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் செப்டம்பர் 3 முதல் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து கலர் ஆப்ஷன்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 ஓஎஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், அட்ரினோ 710 ஜிபியு, 12 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் 1 / 1.56-இன்ச் சோனி LYT-701 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் + f/1.88 அபெர்க்ஷர்) + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 8-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
இதன் கேமரா செட்டப்பில் ஏஐ ஆடியோ ஜூம், ஏஐ குரூப் மேம்பாடு மற்றும் ஏஐ ஸ்மார்ட் ரிமூவல் போன்ற பல ஏஐ அடிப்படையிலான அம்சங்களும் உள்ளன, கடைசியாக இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








