போட்டு தாக்கு.. முரட்டு ஆபர் விலையில் புத்தம் புதிய Realme 13 Pro Plus 5G.. Realme P2 Pro வேற வருது!
Realme: உலகளவில், மாதத்திற்கு 2-3 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள ரியல்மி நிறுவனமானது இம்மாதம், அதாவது 2024 செப்டம்பர் மாதத்தில் (இதுவரை) ஒரே ஒரு புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை மட்டுமே உறுதிப்படுத்தி உள்ளது. அது ரியல்மி பி2 ப்ரோ (Realme P2 Pro) மாடலாகும். இதற்கு பின்னால் மிகவும் சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் மாடல்கள் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி அறிமுகமாகின.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ரியல்மியின் மிகவும் முக்கியமான நம்பர் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும் என்பதால், இவைகளின் இந்திய விற்பனையை ரியல்மியின் மற்ற புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மற்றும் அறிவிப்புகள் பாதிக்க கூடாது என்று ரியல்மி நினைத்து இருக்கலாம் இந்த யூகத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வண்ணம், ரியல்மி அதன் 13 ப்ரோ சீரிஸில் புதிய கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளதுல் கூடவே புதிய சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஸ்மார்ட்போன் க்ரீன் மற்றும் கோல்ட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் மட்டுமே வெளியான ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய கலர் ஆப்ஷனாக 'மோனெட் பர்பிள்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கலர் ஆப்ஷன் இன்று (செப்டம்பர் 2 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி இந்தியா (Realme India) இணையதளம் மற்றும் ஆஃப்லைன் மெயின்லைன் ஸ்டோர்கள் வழியாக விற்பனைக்கு வந்தது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கும் வாங்க கிடைக்கும்.
ரியல்மி 13 ப்ரோ சீரீஸ் மீதான விற்பனை சலுகைகள்: செப்டம்பர் 2 ஆம் தேதி நண்பகல் மற்றும் நள்ளிரவு இடையே மோனெட் பர்பிள் வண்ண விருப்பத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 பேங்க் ஆபர் உடன் ரூ.4,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரையும் பெறுவார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இந்த வங்கி சலுகை மேற்க்குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் புதிய ஊதா கலர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
மேலும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மோனெட் கோல்ட் அல்லது எமரால்ட் க்ரீன் கலர் ஆப்ஷன்களை நீங்கள் வாங்க விரும்பினால், உங்களுக்கு ரூ.4,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். இதே எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் செப்டம்பர் 3 முதல் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அனைத்து கலர் ஆப்ஷன்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 ஓஎஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், அட்ரினோ 710 ஜிபியு, 12 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் 1 / 1.56-இன்ச் சோனி LYT-701 சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் + f/1.88 அபெர்க்ஷர்) + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 8-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது.
ரியல்மி பி2 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நினைவூட்டும் வண்ணம் ரியல்மி பி1 ப்ரோ (Realme P1 Pro) ஸ்மார்ட்போன் ஆனது ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) மாடலை போலவே இருந்தது. அதாவது இரண்டு போன்களும் வடிவமைப்பு மற்றும் சார்ஜிங் திறன்களில் சிறிய மாற்றங்களுடன் ஆனால் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருந்தான். இதே பாணியை நாம் பி2 ப்ரோ மாடலிலும் எதிர்பார்க்கலாம். அதாவது இது ரியல்மி 13 ப்ரோ (Realme 13 Pro) மாடலை போலவே இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








