Home
Mobile

ஜூலை 30 வரைக்கும் பொறுங்க.. அவசரப்பட்டு எந்த Camera Phone-ம்.. 5G Phone-ம் வாங்கிடாதீங்க.. ஏன்னா?

இந்த ஜூலை மாதமானது ஏற்கனவே 'டாப் கியர்' போட்டு போய்க்கொண்டு இருக்கிறது. ரூ.10,000 முதல் ரூ.2 லட்சம் வரையிலாக (லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி முதல் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 வரையிலாக) பல புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை கண்டுவிட்டது. மேலும் பல ஸ்மார்ட்போன்களின் அறிமுகமாக உள்ளன. தற்போது அந்த பட்டியலில் ரியல்மி நிறுவனத்தின் 2 5ஜி ஸ்மார்ட்போன்களும் இணைந்துள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகள் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? கடந்த பல நாட்களாகவே "விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்" என்று விளம்பரப்படுத்தப்பட்டு வந்த ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரீஸ் (Realme 13 Pro 5G Series) ஸ்மார்ட்போன்களின் (Launch Date) வெளியீட்டு தேதி ஒருவழியாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Realme 13 Pro 5G சீரிஸ்: அறிமுக தேதி, விலை, அம்சங்கள்!

இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) என 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும். இவைகள் முறையே ரியல்மி 12 ப்ரோ 5ஜி (Realme 12 Pro 5G) மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 12 Pro Plus 5G) ஸ்மார்ட்போன்களின் "மேம்படுத்தப்பட்ட வாரிசுகளாகும்" என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது இந்தியாவில் அறிமுகம்? ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் வருகிற ஜூலை 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? ரியல்மி இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் வழியாக ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வேகன் லெதர் ஃபினிஷ் தவிர்த்து கிளாஸ் பேக் கவர்களுடன் வரும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் ரியர் கேமரா யூனிட்கள் ஆனது பேக் பேனலின் மேற்புற மையத்தில், சர்குலர் யூனிட்டில் வைக்கப்பட்டுள்ளன. அது ஒரு கோல்ட் கலர் எட்ஜையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்களின் வலது விளிம்புகளில் பவர் பட்டன்கள் மற்றும் வால்யூம் ராக்கர்கள்
உள்ளன.

ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மோனெட் கோல்ட் (Monet Gold) மற்றும் மோனெட் பர்பிள் (Monet Purple) கலர்களிலும், அதே சமயம் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் மோனெட் கோல்ட் கலரிலும் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் எமரால்டு கிரீன் கலரிலும் வாங்க கிடைக்கும். இது வேகன் லெதர் பினிஷை கொண்டிருக்கும்.

மேலும் ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே டிவைஸ் மற்றும் கிளவுட்-பேஸ்டு ஏஐ இமேஜிங் ஆதரவு கொண்ட மூன்று அடுக்கு ஏஐ இமேஜிங் தொழில்நுட்பமான ஹைப்பர்இமேஜ் பிளஸ் கேமரா செட்டப்பை பெறுவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே TÜV ரைன்லேண்ட் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா சான்றிதழுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. ப்ரோ பிளஸ் மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி Sony LYT-701 சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் Sony LYT-600 பெரிஸ்கோப் ஷூட்டர் இடம்பெறலாம்.

என்ன விலைக்கு வரும்? எதிர்பார்க்கப்படும் விலைகளை பொறுத்தவரை, ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ,34,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை விவரங்கள் ஜூலை 30 நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 13 Pro 5G Series India Launch Date July 30 Confirmed Specifications Expected Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X