இன்று மாலை 6 மணிக்கு ரெடியா இருங்க.. ரூ.3000 ஆபர் விலையில் Realme 13 Pro 5G, Realme 13 Pro Plus 5G விற்பனை!
ரியல்மி (Realme) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2 ஸ்மார்ட்போன்கள் இன்று (ஜூலை 30) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அது ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரீஸ் ஆகும். இதன் கீழ் ரியல்மி 13 ப்ரோ 5ஜி (Realme 13 Pro 5G) மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 13 Pro Plus 5G) என 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும். இதனுடன் சேர்த்து ரியல்மி வாட்ஸ் எஸ்2 (Realme Watch S2) மற்றும் ரியல்மி பட்ஸ் டி310 (Realme Buds T310) ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் சரியாக எப்போது அறிமுகம் ஆகும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இவ்விரு ரியல்மி ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயமும் எப்படி இருக்கும்? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்னென்ன விற்பனை சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

எப்போது அறிமுகம்? எப்போது விற்பனை? ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று (ஜூலை 30 ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும். அறிமுகமான சில மணி நேரங்களிலேயே இவ்விரு ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எர்லி அக்சஸ் சேல் (Early Access Sale) ஆனது ஜூலை 30 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, ரியல்மி.காம் (realme.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக நடக்கும்.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்கு ரூ.3,000க்கான பேங்க் ஆபர் (Rs.3000 Bank Offer) கிடைக்கு. கூடவே 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் (No Cost EMI Option) அணுக கிடைக்கும். கூடுதலாக, நீட்டிக்கப்பட்ட ஒரு வருட உத்தரவாதமும் (Extended one-year warranty) கிடைக்கும்.
என்ன விலைக்கு வரும்? ரியல்மி 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.26,000 - ரூ.29,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஆனது ரூ.30,000 - ரூ.35,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய 2 மாடல்களுமே 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டிருக்கலாம். ப்ராசஸரை பொறுத்தவரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரீஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 (Qualcomm Snapdragon 7s Gen 2 Chipset) ஆக இருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 50எம்பி சோனி எல்ஒய்டி-701 ப்ரைமரி சென்சார் பேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனுடன், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3x Optical Zoom) திறன்களுடன் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் (Periscope Telephoto Camera) இருக்கும். இதனுடன் 8எம்பி அல்ட்ராவைடு கேமராவும் (Ultra-wide Camera) பேக் செய்யப்படலாம்.
மறுகையில் உள்ள ரியல்மி 13 ப்ரோ மாடலில் ப்ரோ பிளஸ் மாடலில் உள்ள அதே ப்ரைமரி மற்றும் அதே அல்ட்ராவைட் கேமரா சென்சார்கள் இடம்பெறும். ஆனால் இது ஒரு டெலிஃபோட்டோ அல்லது பெரிஸ்கோப் லென்ஸை இழக்க நேரிடும். பேட்டரியை பொறுத்தவரை, இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுமே 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








