Home
Mobile

ஆகஸ்ட் 29 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. குறைந்த விலையில் வரும் Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 13 5ஜி சீரிஸ் (Realme 13 5G Series) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவில் ரியல்மி 13 5ஜி மற்றும் ரியல்மி 13 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக தரமான அம்சங்கள் மற்றும் அட்டகாசமான வடிவமைப்புடன் இந்த போன்கள் வெளிவரும்.

ரியல்மி 13 5ஜி பிளஸ் அம்சங்கள் (Realme 13+ 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி 13 5ஜி பிளஸ் போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆகஸ்ட் 29 வரை எந்த போனும் வாங்காதீங்க..  வருகிறது ரியல்மி 5ஜி போன்..

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி (MediaTek Dimensity 7300 Energy chipset) சிப்செட் உடன் இந்த ரியல்மி 13 5ஜி பிளஸ் போன் வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரியல்மி 13 5ஜி பிளஸ் போன். மேலும் 16எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

ரியல்மி 13 5ஜி அம்சங்கள் (Realme 13 5G Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆகஸ்ட் 29 வரை எந்த போனும் வாங்காதீங்க..  வருகிறது ரியல்மி 5ஜி போன்..

4480எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரியல்மி 13 5ஜி போன். பின்பு இந்த போனை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

குறிப்பாக ரியல்மி 13 5ஜி சீரிஸ் மாடல்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 13 5G will be launched in India on August 29: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X